Header Ads



ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் சிறப்பு சட்டம் வருகிறது - ஒருலட்சம் இலங்கையர் பயனடைவர்

ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களை அதிகரிப்பதற்கான சட்ட மூலம் ஒன்று அந்த நாட்டின் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளதாக ஐக்கிய அரபு ராஜ்சியத்தின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே இந்த சட்ட மூலம் குறித்து அபுதாபியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த சட்ட மூலத்தின் மூலம், ஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்றுகின்ற ஒருலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்கள் அனுபவிக்கின்ற சித்திரவதைகள், அதிக வேலை பழு, குறைந்த வருமானம், துன்புறுத்தல்கள், துஸ்பிரயோகங்கள் போன்றவற்றில் இருந்து இந்த சட்ட மூலத்தின் மூலம் பாதுகாப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.