Header Ads



மஹிந்த லண்டன் பறந்தார் - கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு

பிரித்தானிய மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, இனக்கொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு பிரித்தானியாவின் லண்டன் பொலிஸில் ஒரு முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று லண்டன் பொலிஸில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த முறைப்பாட்டு மனுவில், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை மகிந்த ராஜபக்ச இழைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனுவில் உலகளாவிய அதிகார விதிகளுக்கு உட்பட்ட பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு ராஜபக்சவை கைதுசெய்து, இந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு அந்த அமைப்பு பொலிஸில்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதேவேளை சிறப்பு ஒரு நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு சிறப்பு இராஜதந்திர விடுபாட்டு உரிமை உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. உலகத்தின் பல நாடுகளில் கொலைகள் செய்து,கொள்ளையடித்து தங்களை வலப்படுத்திகொண்ட மகாராணியையும்,அவர் வம்சத்தையும் முதலில் கூண்டில் ஏற்ற வேண்டும்.கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மீண்டும் நாடுகளை அடிமை கொள்ள துடிக்கும் வெட்கம் கெட்டகூட்டங்கள்.அரபிகளினதும்,ஆசிய,ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் ரத்தத்தை தற்பொழுதும் உறிஞ்சி குடிக்கும் பெண் பேய் மகாராணியாம்.முட்டாள்பயல்கள் உலகம்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.