Header Ads



காலி முஸ்லிம்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் - சிங்கள பேரினவாதத்தின் அட்டூழியம்..!

காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க  வேண்டுமென மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கோரியுள்ளதுடன் இல்லாவிட்டால் இது ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயரில் முஸ்லிம்களை கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டுமெனவும் கூறி சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டு வருகின்றன. அங்கு முஸ்லிம்களின் 15 கடைகள் உள்ள நிலையில் இந்தத் துண்டுப் பிரசுரத்தினால் முஸ்லிம் வர்த்தகர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தம்புள்ள பள்ளிவாசலை மூடுவதற்கு எடுக்கப்பட்ட செயற்பாடுகள் விரிவடைந்து குருநாகல் , அநுராதபுரம் ,தெஹிவளையெனப் பரந்து தற்போது  காலி வரை  வந்துள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் மீது  தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படாத நிலையில் சுதந்திரமாக நடமாடும் நிலையில் பள்ளிவாசல்கள் குறித்த விபரம் சி.ஐ.டி. யினரால்  திரட்ட நடவடிக்கை  எடுக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலேயே காலியில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இது ஏனைய இடங்களுக்கு பரவும் என்பதால் இதனை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும்.  இதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும் போது 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலைக்கு முந்திய காலப் பகுதியை போன்றுள்ளது. எனவே தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்துவதற்கு குறைந்த பட்சம் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டனத்தையாவது தெரிவிக்க முன்வர வேண்டுமெனவும் கோரியுள்ளார்

5 comments:

  1. கொடுக்கா புலி 2 மணிநேரம் கொடுத்தான் மொட்டயங்கள் இதே பாணியில் கேம் கொடுக்க ரெம்ப காலம் இல்ல முஸ்லிம்களே ரெம்ப உசார் உசார் உசார் ....... .ஊர்குருவி..

    ReplyDelete
  2. இவ்வாறான இனவாத செயல்பாடுகளுக்கு எதிராக
    (நீதமான அரசாங்கம் என்று ஒன்றிருந்தால்) கடுமையான
    நடவடிக்கை எடுக்கவேண்டும்,

    ReplyDelete
  3. முஸ்லீம்கள் ஒற்றுமைப்படாதவரை ஒன்றும் நடக்கா

    ReplyDelete
  4. NAMMA OTRUMA THAN BALAM

    ReplyDelete
  5. Muslims divided by policy.
    All thablleq, JI. Thareeqah and thawheed. have get to gather. Otherwise we cant be survive

    ReplyDelete

Powered by Blogger.