Header Ads



பள்ளிவாசல்களுடன் அஹதியா பாடசாலைகளை அமைக்க நடவடிக்கை வேண்டும்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

பள்ளிவாசல்களுடன் அகதியா  பாடசாலையினை  அமைப்பதற்கு மதவிவகார அமைச்சு நடவடிக்கையெடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் பாராளுமன்றத்தில் தனி நபர் பிரேனையொன்றின் மீது உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சான்த பண்டாரவினால் கொண்டுவரப்பட்ட தனி நபர் பிரேரனை மீது மேலும் உரையாற்றும் போது,

இஸ்லாமிய மாணவர்கள் கல்வி பயிலும் அகதியா பாடசாடலைகளில் கல்வி போதிக்கும்  ஆசிரியர்களுக்கென ஒதக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. அவற்றை அதிகரிப்பதற்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

குறிப்பாக அறநெறி பாடசாலைகளுக்கு தேவாயன ஆசிரியர்களை பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் உண்டு. அதற்காக மௌலவி உள்ளிட்ட மதம் சார்ந்த கற்கைகளை  பூர்த்தி செய்த ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கையெடுப்பதன் மூலம்,அறநெறிப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரிய பற்றாக்குறைக்கு  தீர்வினை காணமுடியும்.

அதே வேளை ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க வெறும் உலகக் கல்வி போதுமானதாக இல்லை என்பதை இன்று சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே சன்மார்க்க கல்வியினை ஆரம்பத்தில் இருந்து ஊட்டுவதற்கு அறநெறிப்பாடசாலைகள் ஆற்றும் பணிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹ-னைஸ் பாருக் பாராளுமன்றில் கூறினார்.

அதே வேளை ஏனைய மதத் தளங்களுடன் அறிநெறிப் பாடசாலைகளை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமதுரையின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்ததாக கூறினார்

No comments

Powered by Blogger.