Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் 16 ஆவது வருடாந்த மாநாடு - இந்திய பேராசிரியை பாத்திமா முஸப்பிர் விஷேட சொற்பொழிவு


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 16 ஆவது வருடாந்த மாநாடு ௭திர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு  310, டி.ஆர்.விஜயவர்தன மாவத்தை, கொழும்பு  10 ௭ன்ற முகவரியில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறுமென முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரான என்.எம்.அமீன் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், பிரபல பேச்சாளருமான பேராசிரியை பாத்திமா முஸப்பிர் விஷேட சொற்பொழிவாற்றுவார். முஸ்லிம்களும், ஊடகங்களும் என்ற தலைப்பில் அவரது சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த மூத்த  ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். நிகழ்வில் முஸ்லிம் மீடியா ஊடகவியலாளர்களின் விபரங்கள் அடங்கிய மீடியா டிரக்ரியும் வெளியிடப்படவுள்ளது

No comments

Powered by Blogger.