Header Ads



வேர் அறா வலிமையை அவாவும் வேர் அறுதலின் வலி



(07-06-2012 அன்று விடிவெள்ளி பத்திரிகையில் யாழ் முஸ்லிம் இணையத்தின் வெளியீடான ''வேர் அறுதலின் வலி'' கவிதை நூல் தொடர்பில் வெளிவந்த விமர்சனத்தை இங்கு அப்படியே தருகிறோம்)

கவிஞர் முல்லை முஸ்ரிபா

''அது வாளைப் போன்றது
உன்னைக் கூர்மையாக்குகின்றது
பின்னர் அது உன்னை
உலகத்துடன் போராட வைக்கிறது''

இது வரலாறு பற்றி அல்லாமா இக்பால் சொன்னது. பேனாவைக் கூர்மையாக்கிக்கொண்ட படைப்பாளிகளின் குரலாக வெளிவந்திருக்கிறது 'வேர் அறுதலின் வலி'

வேர் அறுதலின் வலியின் வரலாற்றை மீள் வாசிப்புச் செய்வதாக அமைகிறது யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் வெளியீடாக வெடித்திருக்கும் வேர் அறுதலின் வலி.

சொந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்ட மனித ஆத்மாக்களின் துயரங்களைப் பதியும் கவிதைகளடங்கிய 'வேர் அறுதலின் வலி' ஊடகவியலாளரும், இலக்கிய ஆர்வலருமான யாழ் அன்ஸிரின் அறுவடையாகும். இந்நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை, கொழும்பு 10, முஸ்லிம் பெண்கள் கல்வி நிலையத்தில் நிகழ்ந்தேறியது.

கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் எனப பல்வேறு தரப்பினரின் அவையில் வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியலை மீள்வாசிப்பு செய்வதாக இவ்வெளியீட்டு விழா அமைந்திருந்தது.

ஈழத்தில் முஸ்லிம் எழுத்து என்பது காத்திரமான பணியை நிகழ்த்தியே வந்திருக்கின்ற சூழலில் என்பதுகளுக்குப் பின்னரான போர் கவித்த தளமும், தொண்ணூறுகளிலான வடக்கு முஸ்லிம் துடைத்தெடுப்பும் ஏற்படுத்திய வடு நமது முஸ்லிம் சமூக பொருளாதார, அரசியல், கலாசார சூழலில் பெரும் பாதிப்புகளை பதிவு செய்தே வந்துள்ளது.

இதனை இலக்கிய எழுத்துக்குள் தமிழ, முஸ்லிம் படைப்பாளிகள் உள்வாங்கியுள்ளனர் என்பது அவதானத்திற்குரியது. உதிரிகளாகப் பலவும் தொகுப்புகளாக சலவுமாக வெளிவந்த எழுத்துக்களின் இன்னொரு திரட்சியாகக் கருதத்தக்கது 'வேர் அறுதலின் வலி'

'மீஸான் கட்டைகளின் மீளெழும் பாடல்' ஒட்டுமொத்த ஈழத்து முஸ்லிம்களின் கவி ஆவணமாக வெளிவந்து தசாப்தத்துக்குப் பின் 'வேர் அறுதலின் வலியை' வாசிப்புச்செய்யக் கிடைத்துள்ளது. இது வடக்கு முஸ்லிம் தேசத்தை குவி மையப்படுத்தி ஈழத்தின் பல படைப்பாளிகளினதும் பேனாக்கள் தீட்டிய வலியின் திரட்சியாகும்.

இவ்வெளியீட்டு நிகழ்வு வடக்கு முஸ்லிம்களின் அடிவேர் அறுக்கப்பட்டதன் வலியை பேச்சாக்கி நகாந்தது.

அல்லாமா இக்பால் சொன்னது போல 'அது கண்களைப் போன்றது. இறந்த காலத்தை வாசித்து மீண்டும் அதனை சிருஷ்டித்து உனக்கு முன்னால் அது சமர்ப்பிக்கிறது' என்ற வரலாறு பற்றிய கூற்றை மீள்வாசிக்கச் செய்வதாக நிகழ்வு தொடர்ந்தது.

முஸ்லிம்களின் பூர்வீகம், மண் உரித்து, பலாத்கார வெளியேற்றம், அதனடியான தூர விளைவுகள், அகதி வாழ்வு, மீள்குடியேற்ற தாமதம், சிக்கல்கள், தமிழ், முஸ்லிம் உறுவு, இணக்கப்பாடு எனப் பலவாறான தொனிகள் நிகழ்வில் ஒலித்தன.

இலக்கியம் என்பது சமூக அரசியலைப் பின்புலமாக கொண்டது. சமூக இயங்கியலும் அதனை இயக்கும் அல்லது மாற்றமுறச் செய்யும். அரசியல் தனமும்தான் இலக்கியத்தின் போக்குகளை அல்லது தோல்வியை தீர்மானிக்க வல்லன என்ற வகையில் இலக்கிய நிலைமைகளுக்கு அப்பாலான சமூக அரசியல் தளத்தை நோக்கியே நிகழ்வின் கருத்தாடல்களும், பேச்சுக்களும் முனைப்புக்காட்டின.

இதனால் இதுவரையான 'வடக்கு முஸ்லிம் எழுத்து'க் குறித்த திரட்சியான கருத்தாடல் அல்லது ஆய்வு ஒன்று இந்நிகழ்வில் தேவைப்பாடுடையதாக இருந்தும் அது பின்தளளப்பட்டு போயிற்று.

அதைவிட, முனைப்புக் காட்டுவதாக வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற யதார்த்தத்துக்கு எதிர்ப்புக் காட்டும் நிலைவரங்கள் குறித்து ஆரோக்கியமாக அல்லது சிந்தனையை தூண்டுவதாக பேச்சுக்கள் நீண்டிருந்தன.

முஸ்லிம் சமூகம் தான் இழந்த தன் பிரதேசத்தை மீளப்பற்றுதியுடன் பெற்றுக்கொள்ளும் உரிமை இருக்கிறது. ஜனநாயகம் பற்றிப் பேசும் போது வடக்கு முஸ்லிம்கள் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக துடைத்தெறியப்பட்ட சோகத்துடன் துவண்டு கிடத்தல் பற்றியும் பேசுதல் அவசியம். தமிழ் சமூகம் முஸ்லிம்களின் நிலைமையை புரிந்து கொள்ளுதலும் மீள்குடியேற்றத்திற்கு உதவுதலும் வேண்டும். இரு சமூகங்களுக்கிடையிலும் மீள் இணக்கப்பாடும் இணைந்த செயற்பாடும் இருப்புக்கொள்ளல் வேண்டும் என்பதாக 'வேர் அறுதலின் வலி' வலியுறுத்தி நின்றது.

நிகழ்வின் பிரதான அம்சமாக கவிதைத் திரட்டுக்கு கனதி சேர்த்த மூத்த படைப்பாளர்கள் சிலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வடக்கு எழுத்துத் துறையில் இரு தசாப்த காலமாக இயங்கவிரும் கலைவாதி கலீல் , யாழ் அஸீம், முல்லை முஸ்ரிபா ஆகியோர் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வேர் அறுதலின் வலிக்குள் இயங்கிய யாழ்.அன்ஸிர் எல்லோராலும் பாராட்டப்பட்டார். புலம்பெயர்ந்து போனாலும்கூட தன் சிந்தனையை தன் மண் மீது பாய்ச்சி புது வேர் பற்றியெழும் இவரது முயற்சிகள் நிச்சயம் ' வேர் அறா வலிமையை' ஊட்டும் எனலாம்.

3 comments:

  1. முஸ்லிம்களுக்கு புலிகள் செய்த அக்கிரமங்களை பதிவு செய்துள்ள இந்த கவி நூலை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்.

    ReplyDelete
  2. இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்ட துயரங்கள் ஆவணமாக வெளிகொணர்ந்த பெருமையை முதலில் பெற்றது அஷ்ரப் சிஹாப்தீன் மற்றும் அவருடன் சேர்ந்து இயங்கிய குழுவைச்சாரும். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சராக இருந்தபோது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை இலங்கையில் நடாத்தி குறித்த கவிதை நூல் வெளிக்கொணரப்பட்டது.

    21 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் வடக்கு முஸ்லிம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்வித்ததை கவிதை வடிவில் வெளிக்கொணர்ந்த பெருமை யாழ் முஸ்லிம் இணையத்தையும், அதன் ஆசிரியரையும் சாரும்.

    மொஹமட் கரீம்
    கல்முனை

    ReplyDelete
  3. pena

    "கிளைகளை நறுக்கும் தோட்டக்காரனே பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் வேர்களை என்ன செய்வாய்" என்பதுபோன்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையொன்றினை 90களில் வாசித்த ஞாபகம் வருகிறது.1976இல் அநுராதபுரத்திலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு தமிழகத்திற்கு 'நாடுகடத்தப்பட்டவன்' என்ற வகையில் வேரறுதலின் அல்லத் வேரறுத்தலின் வலியறிந்தவன் நான்.இதனாலேயே எம்.ஏ.நுஃமானின் மொழிபெயர்ப்பில் மஹ்மூத் தர்வீசின் கவிதைகள் எனக்கு உவப்பானவை அனுபவம் கசப்பானதாயிருந்தாலுங்க்கூட.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.