Header Ads



ஜேர்மனியில் சலபிகளை இலக்குவைத்துள்ள பொலிஸார்

TN

ஜெர்மனியில் தீவிர சலபி முஸ்லிம்களை இலக்கு வைத்து அந்நாட்டு பொலிஸார் நாடு தழுவிய ரீதியில் சோதனை நடத்தியுள்ளனர். சமூக ஒழுங்குக்கு அபாயம் விளைவிக்கக் கூடியவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட தனிப்பட்ட நபர்களைத் தேடியே இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதன் போது ஜெர்மனியின் பவரியா, பெர்லின் மற்றும் வடக்கு ரஹின் வெட்பாலியா என 7 மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன் போது நேற்று காலை தொடக்கம் தீவிர சலபி முஸ்லிம்கள் செயற்படும் பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டது.

இதனையொட்டி ‘மில்லது இப்ராஹிம்’ என்ற வலையமைப்புக்கும் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஹென்ஸ் பீட்டர் பெட்ரிக் அறிவித்துள்ளார். குறிப்பாக மூன்று சலபி முஸ்லிம் அமைப்புகளை இலக்கு வைத்து வீடுகள், பாடசாலைகள், பள்ளிவாசல் என இந்த சோதனை நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் தொடக்கம் சலபி முஸ்லிம்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பல பகுதிகளிலும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் முஸ்லிம் அல்லாதோரை மத மாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது அவதானத்தை செலுத்தியுள்ளது. இவ்வாறான 4000 சலபிக்கள் ஜெர்மனியில் இருப்பதாக அந்நாட்டு அரச ஊடகமான ஏ. ஆர். டி. குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. ஜெர்மன் நாட்டுக்காரர்களே இஸ்லாத்தை தழுவி பிறரையும் இஸ்லாத்தின்பால் அழைக்கின்றனர். இதனால் என்ன தப்பு?

    தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான விவாதங்களைத் தொடுத்து, விஷக் கருத்துக்களை கக்கும் நாடுதான் ஜெர்மன்.

    இப்படி விஷக் கருத்துக்களை கக்கிக்கொண்டிருப்பதால், விளைவு வேறு விதமாக மாறியிருக்கிறது.

    ஜெர்மன் நாட்டினர் இஸ்லாத்தின்பால் மோகம் கொள்வதைத் தடுக்க, வீடு வீடாகச் சல்லடை.

    ஏதோ நடக்கட்டும், இதை நமது உம்மாஹ் எதிர்பார்த்ததுதான்!

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ், ஜெர்மனியில் 4000 சலபிகளா?
    சந்தோஷமான விஷயம்.

    நமது நாட்டில் அஷெய்க் அபூ அப்துர் ரஹ்மான் யஹியா சில்மியுடன் 28 சலபிகளும்,
    பலஹத்துரை தார் அச்சலபியாவில் 17 சலபிகளும் மட்டுமே உள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.