Header Ads



அல்ஹைதா, தலிபான் தடை சட்டத்தை அறிமுகப்படுத்த காரணம் எதுவும் இருப்பதாக நம்பவில்லை

TM

அல் கயீடா மற்றும் தலிபான்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடைகளை விதிப்பதற்கான சட்டங்கள் அமுல்படுத்தப்படுவது குறித்து சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி கருத்துத் தெரிவிக்கையில்,  இத்தகைய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக தான் நம்பவில்லை எனக் கூறினார்.

'அல் கயீடா அல்லது தலிபான் இலங்கையில் இல்லை. இது உண்மை. கிழக்கில் கூட இப்பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் இல்லை என்பது தெளிவான விடயம்' என அவர் கூறினார்.

ஐ.நாவுடனான  இலங்கையின் கடப்பாட்டுக்கு இணங்க இப்புதிய ஒழுங்குவிதிகள் அமுல்படுத்தப்படவள்ளன. இதன்படி அல் கயீடா மற்றும் தலிபான்களுடன் தொடர்புவைத்திருத்தல், உதவியளித்தல், நிதியளித்தல் என்பனவற்றுக்கு அபராதம் மற்றும் சிறைவாசம் போன்ற தண்டனைககள் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Senior Minister A.H.M Fowzie speaking on the impending law said that he does not believe there is any reason to introduce such laws. “ Al Qaeda and Taliban don’t exist in Sri Lanka and that is a fact, even in the east the situation is clear to the effect that no people are affiliated to these terrorist groups.” he said.

New regulations are to be introduced to in Sri Lanka keeping inline with its obligations to the United Nations. The new regulations will impose a fine and a jail term for any individual or group aiding, financing, or having links with any of the two organizations.

3 comments:

  1. அமைச்சர் பௌசி அவர்களே இச்சட்டம் எதற்காக என்று தெரியாத ? இனி வரும் காலங்களில் பள்ளி உடைப்பு மற்றும் முஸ்லிம்களை தூண்டிவிட்டு வரும் குழப்பமான சூழ்நிலைகளில் இந்த முஸ்லிம்கள் அதாவது இவர்கள் அல் கய்டா ,தலிபான் போன்ற அமைப்புக்களுடன் தொடர்பு உள்ளது என்று பட்டம்கட்டி இவர்களை சிறையில் அடிக்கலாம் அல்லவா அதற்காகதான் திரு திரு என்று உடனடியாக இச்சட்டம் வர இருக்கிறது .

    இல்லாவிடில் எதற்காக பள்ளிகள் உடைப்பு , பள்ளி சம்பந்தமான சி ஐ டி விசாரணை மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான பல வன்செயல்கள் .

    ஒன்று மட்டும் புரிகிறது தமிழ் மக்களை புலி என்று கைது செய்தார்கள் இனி முஸ்லிம்களை அல் கய்டா ,தலிபான் என்று கைது செய்து கூட்டில் அடைகப்போகிரன் ( இதில் ஜிஹாத் என்ற பெயர் மறந்து இருப்பார்கள் இல்லாவிட்டால் அதற்கும் ஒரு சட்டம் போட்டு இருப்பார்கள் ) .

    ஒரு இஸ்லாமிய அன்பன்

    ReplyDelete
  2. மிகமிக சரியான கருத்து நண்பனே.....

    ReplyDelete
  3. பள்ளி உடைப்பிட்கு எதிராக குத்பா செய்தாலும் அழ கைதா என்று சொல்லி உள்ளே தள்ளி விடுவார்கள்.

    முஸ்லிம்களின் குரல்வளையை நசுக்கிவிட்டு, பள்ளிகளை உடைக்கத் திட்டம்.

    அடுத்த தடவை பேஸ் புக்கில், நெட்டில் பள்ளி உடைப்பு பற்றி செய்தி போடுகின்ற அனைவரும் அல் கைதா என குற்றம் சாட்டப் படலாம்.

    ReplyDelete

Powered by Blogger.