உலமாக்கட்சித் தலைவர் மௌலவி முபாரக் அரசாங்க புலனாய்வு பிரிவினரால் விசாரணை
தகவல் உதவி - நவமணி
முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்பாக அரசாங்க புலனாய்வு பிரிவினர் தகவல் கேட்டமை தொடர்பாக உலமாக்கட்சித் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் விடுத்த ஊடக அறிக்கை தொடர்பாக பொலிசார் அவரிடம் விளக்கம் பெற்றுள்ளனர்.
அறிக்கை ஊடகங்களில் வெளிவந்த அடுத்த இரு தினங்களில் மௌலவி முபாரக்கின் ஊர் அமைந்துள்ள கல்முனைப் பொலிசார் மௌலவி முபாரக்குடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் தற்போதைய அரசினதும் வெற்றிக்காக உழைத்த உலமாக் கட்சித் தலைவர் தனதறிக்கையில் புலனாய்வு பிரிவின் இந்த நடவடிக்கைக்கெதிராக முஸ்லிம்கள் சத்தியாக்கிரகஞ் செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தது தொடர்பாகவே முபாறக் மௌலவியிடம் பொலிசார் விளக்கம் கேட்டுள்ளனர். எங்கு சத்தியாக்கிரகம் நடத்தப் போகின்றீர்கள் என்ற விபரங்களையே பொலிசார் கேட்டுள்ளனர்.
எமது முன்னைய செய்தி
http://www.jaffnamuslim.com/2012/06/blog-post_641.html
எமது முன்னைய செய்தி
http://www.jaffnamuslim.com/2012/06/blog-post_641.html

ஜெனீவாவில் சத்தியாக்கிரகம் செய்யப்போகும் முஸ்லீம்கள் என்று நாளை செய்திகள் வரலாம் .
ReplyDeleteMeraan
முபாரக் மவ்லவி ஒரு புறமும், முஜிபுர் ரஹ்மான் மறுபுறமும், அவர்கள் தான் மொத்த முஸ்லீம்களினதும் தலைவர்கள் என்பது போல அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல்,
ReplyDeleteஒரு தலைமையின் கீழ் முடிவுகளை எடுத்து, நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதே சிறந்தது.
கண்டன அறிக்கை விடுவது தப்பில்லை, ஆனால், சத்தியாக்கிரகம், ஆர்ப்பாட்டம் என்று தனித்தனியாக அழைப்பு விடுப்பது நல்லதல்ல.
Dear Brothers,
ReplyDeleteWe have strong Islamic Movements in SriLanka. (Tableegh, J.slami, Tawheed etc), and few Muslim Parties. (Muslim Congress), and Muslim Leaders in other Parties, Ulamas and Muslim Scholars. this the time to join under ONE Flag to solve these problems in our Country. All monks, all others gathering in a place and discussing properly, and acting as per the Meetings.
so why we cant do better than them? Lets join together! and show the real Power to the World!
Hibban