விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசேஞ் லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம்
விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜுலியன் அசேஞ் லண்டனில் உள்ள ஈகுவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஈகுவடோர் அரசாங்கம் பரிசீலித்துவருவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் உள்ள ஈகுவடோர் தூதரகத்துக்கு சென்ற ஜுலியன் அசேஞ் அரசியல் தஞ்சம் தொடர்பில் தம்மிடம் பேசியதை தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்துவதற்கு எதிராக விக்கி லீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடு பிரித்தானிய நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜுலியன் அசேஞ் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர் லண்டனில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அமெரிக்க இராஜாங்கத் தகவல்களை வெளியிட்டு பல்வேறு சர்ச்சைகளை விக்கி லீக்ஸ் இணையத்தளம் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment