Header Ads



அபாயா, ஹிஜாப் அணிய தடைவிதிக்காதீர்கள் - மேல்மாகாண கல்வியமைச்சு சுற்றுநிருபம்


நவமணி

முஸ்லிமல்லாத பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர் பாடசாலைக் கூட்டங்களுக்குச் செல்கையில் அபாயா, ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கக்கூடாது என மேல் மாகாண சபையின் கல்வியமைச்சு சகல பாடசாலை அதிபர்களையும் சுற்றுநிருபம் மூலம் கோரியுள்ளது.

கொழும்பிலுள்ள ஒரு சில பெரும்பான்மைப் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் கூட்டங்களுக்கு அபாயா, ஹிஜாப் அணிந்து சென்ற போது திருமயனுப்பப்பட்டுள்ளனர் . அபாயா, ஹிஜாப் அணியாது கூட்டங்களுக்கு வருமாறு அதிபர்கள் கேட்டுள்ளனர்.

இதனால் பெரும்பான்மைப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர் பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர். இது குறித்து மேல் மாகாண சபையின் கல்வியமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெளிவுபடுத்தினார்.

மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கல்வி அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்த இந்த விடயத்தை அடுத்து முதலமைச்சர் ஆச்சரியப்பட்டார்.

பெரும்பான்மைப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களின் உடைகளைச் கழற்றுவதும், முஸ்லிம் பெண்கள் அபாயா, ஹிஜாபை கழற்றிவிட்டு கூட்டங்களுக்கு வருமாறு உத்தரவிடுவதும் அதிகரித்து வருகின்றமை குறித்து முதலமைச்சர் கவலை தெரிவித்தார்.

பெரும்பான்மை பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர் ஹிஜாப், அபாயா அணிந்து கூட்டங்களுக்கு வர அனுமதிக்கும் வகையில் சகல பாடசாலைகளுக்கும் சுற்றுநிருபமொன்றினை உடனடியாக அனுப்பிவைக்குமாறு முதலமைச்சர், மாகாண கல்விப்
பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

1 comment:

Powered by Blogger.