Header Ads



கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வலியுறுத்து

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்து வருவதாக இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள நவமணி பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவாத பிரச்சாரங்கள் தீவிரம் பெற்றிருக்கும் நிலையிலேயே கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

கிழக்கு தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால் கட்சியின் வாக்கு வங்கி சரிவடையுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பரவலாக வன்முறைகள் நிகழ்ந்துவரும் சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு மாகாண ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென கட்சி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்டுகிறது.

No comments

Powered by Blogger.