Header Ads



சிங்கள பத்திரிகைகளில் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகள் - என்.எம். அமீன்

ஏ.ஆர்.ஏ.பரீல்

சிங்கள பத்திரிகைகள் முஸ்லிம்களின் குற்றச்செயல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான செய்திகளை முஸ்லிம் சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு வெளியிடுகிறது. இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது,

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் ஜுன் 5 ஆம் திகதி வரை முன்னணி சிங்கள பத்திரிகைகள் 60 சந்தர்ப்பங்களில் இவ்வாறு செய்திகளை வெளிட்டுள்ளன. குற்றச்செயல்கள், சட்டவிரோதங்கள் தொடர்பாக  செய்திகளை சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டு பிரசுரிப்பது பத்திரிகையாளர்களின் ஒழுக்கக் கோவை விதிகளுக்கு மாறானதாகும்.

நாட்டில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண்டிய இக்காலகட்டத்தில் இவ்வாறு ஒரு சமூகத்தின் பெயர் குறிப்பிட்டு வெளிவருவது தவிர்க்கப்பட வேண்டும். இதுகுறித்து பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு சிங்கள மொழி பத்திரிகை ஆசிரியர்களை தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறான பத்திரிகை செய்திகளினால் முஸ்லிம் சமூகம் குற்றமிழக்கும் சமூகமாக ஏனையவர்களிடம் அடையாளப்படுத்தப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.