உலகின் மிகஉயரமான பள்ளிவாசல் அல்ஜீரியாவில் நிறுவப்படுகிறது
MU
அல்ஜீரியாவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிகஉயரமான பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அல்ஜீரியாவில் அமைக்ப்படவுள்ள உலகின் மிகஉயரமான பள்ளிவாசலுக்கு அத்திவாரமிடும் பணிகள் கடந்த மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
மக்காவின் புனித மஸ்ஜிதுல்ஹரம், மதீனாவின் புனித மஸ்ஜிதுன் நபவி ஆகிய பள்ளிவாசல்களுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய பள்ளிவாசலாகவும் இது அமையவுள்ளது. இப்பள்ளிவாசலை அமைப்பதற்கு 1 பில்லியன் யூரோக்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிவாலுடன் அமைக்கப்படவுள்ள உயரமான மினாரத்,ஈபிள் கோபுரத்தை ஒத்த உயரத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அதவாது பள்ளிவாசல் மினாரத்தானது 270மீற்றர்(880அடி) உயரத்தையுடையதாக அமைக்கப்படவுள்ளது. மோரோக்கோவின் கஸ்பலங்கா நகரில் அமைந்துள்ள ஹஸ்ஸான் II பள்ளிவாசலே, தற்போது உலகின் மிகஉயரமான பள்ளிவாசலாக விளங்குகின்றது.இப்பள்ளிவாசலின் மினாரத் 210மீற்றர் உயரமுடையது.
அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியஸில் அமைக்கப்படவுள்ள இப்பள்ளிவாசலானது அல்ஜியஸ் பெரியபள்ளிவாசல் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது 20 ஹெக்டயர் நிலப்பரப்பில்,சீன பொறியியல் கட்டுமான கூட்டுத்தாபத்தினால் கட்டப்படவுள்ளதுடன், இதனால் 17,000 தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதுடன் இவற்றில்அதிகமான தொழில்வாய்ப்புக்கள் அல்ஜீரிய நாட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியஸில் அமைக்கப்படவுள்ள இப்பள்ளிவாசலானது அல்ஜியஸ் பெரியபள்ளிவாசல் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது 20 ஹெக்டயர் நிலப்பரப்பில்,சீன பொறியியல் கட்டுமான கூட்டுத்தாபத்தினால் கட்டப்படவுள்ளதுடன், இதனால் 17,000 தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதுடன் இவற்றில்அதிகமான தொழில்வாய்ப்புக்கள் அல்ஜீரிய நாட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இப்பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் 2015ஆம் ஆண்டில் பூர்த்தியாக்கப்படும்.மேலும் உலகின் மிகஉயரமான பள்ளிவாசலில் ஒரே தடவையில் 120,000 பேருக்கு தொழக்கூடியவகையில் அமைக்கப்படவுள்ளதுடன்,பள்ளிவாசலுடன் இணைந்ததாக வாசிகசாலை மற்றும் கலை அருங்காட்சியகம் என்பன அமைக்கப்படவுள்ளது.


நம்ம முஸ்லிம்களுக்கு பைத்தியந்தான் பிடித்திருக்கிறதுபோல.
ReplyDeleteஅல்ஜீரியாவில் சாப்பிடுவதற்கே வழியில்லாத ஏழைகள் இருக்க, உலகிலே உயரமான பள்ளிவாசல் தேவையா? இதனால்தான், பல பக்கங்களிலுமிருந்து நமது உம்மத்திற்கு சோதனைக்கு மேல் சோதனை தொடருது.
பள்ளிவாசல் என்பது, இறைவனைத் தொழுவதற்கு மாத்திரந்தான்! ஆக, மிஞ்சிப்போனால் நமது விரல் வீக்கத்திற்கேற்ப கட்டினால் போச்சு.
allahu akbar...
ReplyDeleteயாரு பள்ளியை மிக ,மிக அழகாக உயரமாக ,ஆடம்பரமாக கட்டினான் என்று அல்லாஹ் பார்க்கமாட்டான்.யாருடைய உள்ளத்தில் ஈமானும்,தக்வா எனும் பய பக்தியும் இருக்கிறதோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் மிக உயர்தவர்.
ReplyDeleteஅரபியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு குரானும்,ஹதீசும் புரியவில்லை.வறிய நிலையில் வாடும் மக்கள் நிறைந்த நாட்டில் பெருமைக்காக
பள்ளியைக் கட்டி அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதிக்க போகிறார்கள்.இந்த உலகத்தில் மிக பெரிய பள்ளிவாசல் இந்த பூமிதான்.மல,சலகூடம் தவிர்ந்த முழு இடமும் இறைவனை தொலுவதட்குரிய இடம்தான்.மினாராக்களோ, டோம்களோ பள்ளிக்குரிய அடையாளங்களாக
இருக்கலாம்.ஆனாலும் அவசியமில்லை.
ஒரு நல்ல அரசுக்கு அழகு ஈமானுடன் கூடிய கல்வி,
சுகாதாரம்,சுத்தமான குடிநீர்,போக்குவரத்து ,வேலைவாய்ப்புகள் இப்படியான மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி சந்தோசமாக வாழ வைப்பதுதான்.நாட்டை ஆள்பவர்களுக்கு அல்லாஹ்
நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்.
Meraan
தேவை இருக்கின்றதா, அல்லது ஆடம்பரத்திற்காக கட்டப் அப்டுகின்றதா என்பதையும் நோக்க வேண்டும்.
ReplyDeleteதொழுவதற்கு 120000 பேர் இருக்கின்றார்கள், ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக கட்டப்பட்டால் ஒன்றும் சொல்ல முடியாது.ஆடம்பரத்திட்காகவோ, அல்லது உலகில் பெரிய பள்ளி என்று பெருமை அடித்துக் கொள்வதற்காகவோ கட்டப்பட்டால், அது மார்க்கம் அனுமதிக்காத வேலை.
மினாராக்கள், அல்லது டோம்கள் பிரயாணிகளுக்கு பள்ளியை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள உதவுகின்றன, அவ்வளவுதான்.
அடுத்து, மல சல கூடங்கள் மட்டுமல்ல, கபுருகள் உள்ள இடத்திலும் ரசூலுல்லாஹ் தொழுவதை தடை செய்துள்ளார்கள்.
sariyana muslim ippadippatta aadampara perumai serkum widayangalai wirumpuwathillai kattidangal uyaramahak kattappaduthalum kadaisikkalathin adaiyalamahum athilum em muslimgal iruppathe kawalikkuriyathahum. athu masjith aanalum sariye
ReplyDelete