Header Ads



நைஜீரியாவில் கட்டிடம் மீது விமானம் மோதியது - 100 க்கும் மேற்பட்டவர்கள் மரணம்




நைஜீரியாவில் பயணிகள் விமானம் இரண்டு மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பயணிகள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் மோதிய அந்த விமானத்தில் 147 பேர் இருந்துள்ளனர். லாகோஸில் இருந்து தலைநகர் அபுஜாவுக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கக் கூடும் என நைஜீரிய விமான போக்குவரத்து அதிகார அதிகாரி ஹெரோல்ட் டெனுரன் தெரிவித்துள்ளார்.

விமானம் கட்டிடத்தில் மோதி தீக்கிரையானதாக விபத்தினை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியில் ஏறத்தாழ 50 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விமான விபத்தினையடுத்து லாகோஸ் விமான நிலையம் மூடப்பட்டது. காத்திருந்த பயணிகள் திரும்பிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

நேற்று (சனிக்கிழமை) மற்றொரு ஆப்ரிக்க நாடான கானாவில் நடைபெற்ற விமான விபத்தில் ஏறத்தாழ 10 பேர் உயிரிழந்தனர். கார்கோ விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்று பயணிகள் பேருந்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.



No comments

Powered by Blogger.