மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத் போராட்டத்தில் குதிக்கிறது
மியன்மார் - பர்மாவில் பௌத்த இன வெறியர்களால் ஏற்பட்டுள்ள இனகலவரத்தின் காரணமாக பலர் பலியாகியும் இருப்பிடங்களை இழந்தும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு உள்ளனர்.
இதனை கண்டிக்கும் விதமாக மியன்மாரில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களில் உள்ள அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இன்று வரை இந்த கலவரத்திற்கு காரணமான மியன்மார் அரசை கண்டிக்காத காரணத்தால் வரும் 19.௦6.2012 அன்று பெசன்ட் நகரில் உள்ள ஐநா அகதிகள் கமிஷனர் அலுவலகம் முன்பு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதன் தலைவர் எஸ் எம் பாக்கர் கண்டன உரை நிகழ்த்துகிறார் . அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அணியணியாய் திரண்டு வர அழைக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

ellorum ondru saruwom...........iii
ReplyDeleteஎல்லோரும் ஒன்று சேருங்கள் உலக முஸ்லிம்களின் நண்மைக்காக
ReplyDeleteஆனால் தலைவரின வழியை பின் பற்றிவிடாதீர்கள்
யாழ் குருவி