Header Ads



இலங்கையின் ஆதிக் குடிகள் முஸ்லீம்களே..! தௌஹீத் ஜமாஆத் சொல்கிறது (வீடியோ)

Rasmin misc

இலங்கை முஸ்லீம்கள் வெளிநாட்டு இறக்குமதிகள், அரபு நாட்டில் இருந்து வந்து இலங்கையில் குடியேறிய வந்தேரிகள் என்ற ஒரு பிரச்சாரத்தை அண்மைக் காலமாக புத்த மத கடும் போக்கு பிக்குமார்கள் சிலர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதே நேரம் “பேராசிரியர் விக்கிரமபாகு கருணாரட்ன” போன்றவர்கள் சிங்களவர்கள் தான் வந்தேறு குடிகள் என்பதை உடைத்துப் பேசுவதும் நாம் மறக்க முடியாது உண்மையாகும்.

சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பின் தொடராக பள்ளிவாயல்களை தகர்க்கும் பணிகளையும் இவர்கள் சமகாலத்தில் முடுக்கிவிட்டுள்ளார்கள். தம்புள்ளைப் பள்ளியில் ஆரம்பித்தவர்கள், குருநாகல் மத்தரா பிரச்சினையை உண்டாக்கினார்கள், அதைத் தொடர்ந்து தற்போது தெகிவளை மிருகக் காட்சி சாலைக்கு அருகில் உள்ள பள்ளியையும் ஆக்கிரமிக்கும் பணியில் ஈடுபடுகின்றார்கள்.

இது போன்றவர்களின் “முஸ்லீம்கள் அரபு நாட்டு இறக்குமதிகள்” என்ற இந்த போலியான கற்பனைச் பிரச்சாரத்தை உடைக்கும் விதமாகவே இந்த உரை ஆற்றப்பட்டுள்ளது.

உண்மையில் இலங்கை முஸ்லீம்கள் வந்தேறிகளா?

இலங்கை முஸ்லீம்களுக்கு சோனகர்கள் மற்றும் மூர்ஸ் என்ற பெயர்கள் வரக் காரணம் என்ன?

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்?

இயக்கர் மற்றும் நாகர் என்ற பழங்குடியினர் யார்?

விஜயனும் அவனுடைய 700 தோழர்களும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தது உண்மையா?

இலங்கை முஸ்லீம்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுப் புத்தகமான மகாவம்சம் என்ன சொல்கிறது?

அரபிகளுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் என்னென்ன?

போன்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் இந்த உரையில் அடங்கியுள்ளன.


3 comments:

  1. சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். இது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாகும். சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரமாகக் கணிக்கப்படுகின்றது. புவியியல் ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்திலும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
    [தொகு]வரலாறு

    கண்டி இராச்சியத்தின் கிழக்கின் முக்கிய துறைமுகமாகவும் சம்மாந்துறை விளங்கிய வரலாற்றைக் காண்கின்றோம். சம்மாந்துறையிலிருந்து ஐந்து பாதைகள் மலைநாட்டை நோக்கிச் சென்றுள்ளதாக “மட்டக்களப்புத் தமிழகம்” எனும் நூல் குறிப்பிடுகின்றது. இஸ்லாத்துக்;கு முந்திய காலங்களிலும் பாவா ஆதம் மலையைத் தரிசிப்பதற்கும், வெளிநாட்டார் சம்மாந்துறைத் துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டிவிட்டுச் சென்றுள்ள தகவலை “காத்தான்குடி வரலாறு” குறிப்பிடுவதையும் அறிகின்றோம்.
    டிஒய்லி – Dioyly என்ற பிரித்தானியத் தூதுவர் “போர்த்துக்கீசரின் காலத்தில் சம்மாந்துறை கண்டி இராச்சியத்தின் பிரதான துறைமுகமாக அமைந்திருந்தது” என தனது தினக் குறிப்பில் பதிந்துள்ளார்.
    1676இல் ஒல்லாந்து அதிபதியாகக் கடமைபுரிந்த ஜேக்கப் பெர்னாந்து “மட்டக்களப்பு என்ற சம்மாந்துறையையும் கண்டியையும் ஐந்து காட்டுப்பாதைகள் இணைத்தன” என்று கூறிய ஆதாரமும் கிடைக்கின்றன. ஒல்லாந்து தளபதியான ஸ்பில்பேர்க்கன் என்பவர் இந்தியாவில் “மட்டக்களப்பு ஆறு எங்கே உள்ளது” என விசாரித்தறிந்து சம்மாந்துறையை வந்தடைந்த குறிப்பேடுகளும் உண்டு. சம்மாந்துறை முஸ்லிம்களின் உதவியோடு கண்டி அரசன் விமலதர்மசூரியனை சந்திக்கச் சென்றுள்ளான்.
    இவ்வாறு வரலாற்று ஆதாரங்கள் சம்மாந்துறைத் துறைமுகத்தையும், வர்த்தக நடவடிக்கைகளையும், கண்டி அரசனுக்குள்ள தொடர்புகளையும் விளக்குவதை அறியலாம். சம்மாந்துறை கடல் சார்ந்த துறைமுகமா? என்ற கேள்வி எழலாம். மட்டக்களப்பு வாவியூடாக அதன் தென்பகுதியின் கரைதான் சம்மாந்துறை. பரந்து விரிந்த இவ்வாவியின் தென்பகுதியைத்தான் மட்டக்களப்பு என பெயர்குறித்து வழங்கப்பட்டு வந்துள்ளது. “புளியந்தீவு” என்ற இடத்தில் 1628இல் போர்த்துக்கீசர் தமது பாதுகாப்புக்காக கோட்டையைக் கட்டிய பின்தான் புளியந்தீவு மட்டக்களப்பாக மாற்றமடைந்தது. இன்றும்கூட சம்மாந்துறையில் மட்டக்களப்புத் தரவை – 01,02 என இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் இருப்பதை அறியலாம்.
    இந்தியாவில் இருந்து முக்குகர் வருகை , சோழநாட்டு இளவரசி சீர்பாததேவியின் வருகை, சிந்துபாத்தின் வருகை, அராபியர் , பாரசீகர் வருகை என்பன மட்டக்களப்பு வாவியூடாக சம்மாந்துறை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கையினுள் பிரவேசிக்கும் பிரயாணப் பாதையாகச் சம்மாந்துறை இருந்து வந்துள்ள வரலாற்று ஆதாரங்கள் இன்னும் பலபல எடுத்துக் காட்டலாம். விரிவஞ்சி விடுகின்றேன்.
    [தொகு]பெயர்க்காரணம்

    சம்மான் - துறை என இரு பதங்களாக வகுக்கும்போது துறை என்பதற்கான காரண காரியங்களைக் கண்டோம். இந்திய முஸ்லிம் வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் ‘சம்மான் காரர்’ என அழைக்கப்பட்டனர். கொழும்பு ‘சம்மான் கோட்டுப் பள்ளி’ இந்திய முஸ்லிம்களின் அடையாளச் சின்னம். அத்துடன் சாமான்கள் வந்திறங்கிய ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகமாக இருந்தபடியாலும் சாமான்துறை, சம்மாந்துறையாக பெயர் பெற்றிருக்கலாம். ‘சம்பன்’ என்பது மலாய மொழியில் வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வள்ளங்களைக் குறிக்கும் சொல்லாகும். இந்திய முஸ்லிம் வியாபாரிகளும், மலாயர்களும் வர்த்தக நோக்கில் வங்காள விரிகுடாவிலிருந்து மட்டக்களப்பு வாவியூடாக, அதன் தென்பகுதித் துறையில் வந்திறங்கிய படியால் சம்மாந்துறை என பெயராயிற்று எனலாம். http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88

    ReplyDelete
  2. முஹம்மத்05/06/2012, 07:02

    சமூதாய நலன் கருதும் இணையம் என்றவகையில்தான் நான் என்னுடய கருத்தை பதிந்தோன், அந்த கருத்தை நீங்கள் எதற்காக பப்லிஷ் பன்னவில்லை என்பது எனக்கும் புரியவில்லை.
    வஸ்ஸலாம்.

    ReplyDelete
  3. ஆபாசமான முறை தவறிய கேவலமான வார்த்தைகள் இல்லாத, இறை நிந்தனை செய்யாத கருத்துக்களை
    பதிவிட மறுப்பது கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.