Header Ads



துணை ஜனாதிபதி ஜஹாமித் அன்சாரி முன் சச்சின் டெண்டுல்கார் எம்.பி.யாக பதவியேற்றார்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். இன்று காலை மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹாமித் அன்சாரியின் அலுவலகத்தில் உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இவருடன் நியமிக்கப்பட்ட நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு ஏகா ஆகியோர் கடந்த மாதம் பதவியேற்று கொண்டனர்.

சென்ற மாதம் ஐபிஎல் போட்டிகளில் சச்சின் பிஸியாக இருந்ததால் அப்போது பதவி ஏற்கவில்லை. இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனி, சச்சின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார். சச்சின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட போது, பெரும் சர்ச்சை ஏற்பட்டு, வழக்கு நீதிமன்றம் வரை போனது. பின்னர் நீதிமன்றம் பிரதமரின் நியமன விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என கூறியதால் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

2 comments:

  1. சூதாடிகலெல்லாம் MP .கேவலங்கெட்ட இந்திய அரசியல் .
    Meraan

    ReplyDelete
  2. இந்திய அரசியலில் இருப்பவர்களை விட சச்சின் ஒன்றும் மோசமானவர் இல்லை.
    தனது திறமையால் புகழ் பெற்றவர்.

    மீரான், சச்சின் சூதாடி என்று குற்றம் சொல்ல என்ன ஆதாரம்?

    வீணாக பழி சுமத்த வேண்டாம்.

    அதே நேரத்தில், சச்சின் சாக்கடை அரசியலில் நுழைவது நல்லதல்ல.
    சனத் ஜெயசூரிய மாதிரி உள்ள மதிப்பையும் இழந்துவிடாமல் இருந்தால் சரிதான்.

    ReplyDelete

Powered by Blogger.