பள்ளிவாசல்கள் எதிர்நோக்கும் மற்றுமொரு நெருக்கடி..!
கொழும்பு ரத்மாலனை அல்லாஹ்வின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜும்மா தொழுகை நடைபெறும் வெள்ளிக்கிழமை தினங்களில் பள்ளிவாசலுக்கு வரும் முஸ்லிம்கள் சிறிய அன்பளிப்புகளை செய்து வருவது வழக்கமானது. அவ்வாறு சேர்ந்த பணத்தில் போலி நாணயத் தாள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது,
ரத்மாலனையில் அமைந்திருக்கும் குறித்த பள்ளிவாசலில் ஒவ்வொரு ஜும்மா தினத்தன்றும் அன்னளவாக 12 ஆயிரம் ரூபாய்கள் பணம் சேருவதுண்டு.
பள்ளிக்கு ஜும்மா தொழுகைக்கு வந்துள்ள ஒரு நபர் 500 ரூபாய் பணத்தை அன்பளிப்பாக வழங்குவதாகவும், அதற்காக தன்னிடமுள்ள 5 ஆயிரம் ரூபாவை மாற்றித்தருமாறும் கேட்டுள்ளார்.
அதன்படி அவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு, அன்பளிப்பு பணம் 500 ரூபா போக 4.500 ரூபாவை பள்ளி நிர்வாகத்தினர் மீண்டும் அந்த குறித்த நபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்பின்னர்தான் அந்த நபர் வழங்கிய 5 ஆயிரம் ரூபாய்களும் போலியானைவை என்று தெரியவந்துள்ளதுடன், பள்ளிவாசலுக்கு சேர்ந்த 4.500 ரூபாய்களையும் குறித்த நபர் பகற்கொள்ளையிட்டு சென்றுள்ளமையும் அம்பலத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் நடைபெற்ற மறுவாரமும் அதாவது ஜும்மா தினத்தன்று கிடைத்த பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கும்போது அதில் சுமார் 2000 ரூபாய்கள் போலி நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
அல்லாஹ்வின் இல்லத்திற்காக சேர்க்கப்படும் இதுபோன்ற பணத்தை, அல்லாஹ்வின் இல்லத்தில் வைத்தே சுருட்டிச் சென்றமையானது பிரதேச முஸ்லிம்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டுச் செய்யப்படும் இதுபோன்ற பொல்லாத செயல்கள் குறித்து முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் செயற்படுவோம்.
அதேவேளை ஜும்மா தினங்களில் சேர்க்கும் இந்த பணத்தை பள்ளிநிர்வாகிகள் வங்கிகளில் வைப்பிலிடச் செல்லும்போது அவை போலி பணமென்று கண்டுபிடிக்கப்படுமாயின் அங்கு பள்ளிவாசல் நிர்வாகிகளும் சங்கடங்களை எதிர்கொள்வது மாத்திரமின்றி, பொலிஸ் விசாரணைக்கும் முகம்கொடுக்க வேண்டியேற்படுகிறது. எனவே இதுகுறித்து சகல பள்ளிவாசல் நிர்வாகிகளும் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது சிறந்ததாகும்..!

நல்ல,கள்ள நோட்டுகளை சரி பார்க்கும் மெசின் இருக்கிறதுதானே,பெரிய விலையுமில்லை ஒன்றை வாங்கி அதில்
ReplyDeleteநோட்டுகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.போலீஸ்,வங்கிகளின் தவறான கண்ணோட்டத்திலிருந்து தப்பிக் கொள்ளலாம்.
Meraan
பலநாள் திருடன் இதோ மாட்டிவிட்டான்
ReplyDeleteதிருட்டு பயல்