Header Ads



மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கவனத்திற்கு..!

KI

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்ற பகுதிகளான செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது அரச காணிகளை பகிர்ந்தளிப்பதற்காக காணிக்கச்சேரிகள் நடைபெற்றுவருகின்றன.

இது வரை காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமல் விவசாயம் செய்யும் மற்றும்  குடியிருப்புக்களை அமைத்துவரும் மக்களுக்கு காணிகளை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டுகின்றன.

இதில் காணிகளற்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இந்த காணிக்கச்சேரிகளுக்கு சமூகமளித்து தமது கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். இதனுடாக மீள் குடியேற்றம் முழுமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

விவசாயத்திற்காக ஒரு ஏக்கரும், குடியிருப்புக்காக அரை ஏக்கரும் இதில் வழங்கப்படவுள்ளன. எனவே இப்பகுதியில் தமது காணி உறுதிப்பத்திரத்தை பெற்றக்கொள்ளாமலிருக்கும் பொதுமக்கள் இக்காணிக்கச்சேரிகளுக்கு சமூகமளித்து தங்களது காணிக்களுக்கான கோரிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் உப செயலாளர் சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.