Header Ads



பிரிட்டன் பொலிஸாரை குற்றம்சுமத்துகிறார் இலங்கை அமைச்சர்

பிரித்தானிய மகாராணியின் வைரவிழா நிகழ்வில் பங்கேற்கச் சென்றிருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் நடத்திய போராட்டத்தைத் தடுக்க தவறிவிட்டதாக ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறை மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“ஜுன் 6ம் நாள் மால்பரோ ஹவுஸ் முன்பாக மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்ட போது ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களைப் போன்று வேடிக்கை பார்த்தனர். அதைத் தடுக்க அவர்கள் முனையவில்லை. நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜேர்மனி என்று ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து பெருமளவிலான தமிழ் இளையோர் மால்பரோ ஹவுஸ் முன்பாக திரண்டிருந்தனர்.

இதிலிருந்து அவர்கள் இந்தப் போராட்டத்துக்குத் தயார்படுத்த பெரியத்தொரு காலஅவகாசத்தைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, குற்றங்களைத் தடுப்பது, மற்றும் புலனாய்வு ஆகியவற்றில் பிரபலம் பெற்ற ஸ்கொட்லன்ட்யார்ட் இதை முன்னரே அறிந்திருக்க வேண்டும்.

ஆனால துரதிஸ்டவசமாக- ஒரு கொமன்வெல்த் நாட்டின் தலைவருக்கு எதிராக, பிரித்தானிய மகாராணியின் அழைப்பின் பேரில் லண்டன் வந்தவருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ ஸ்கொட்லன்ட்யார்ட் நடவடிக்கை எடுக்கவில்லை. தீவிரவாத அமைப்பு ஒன்றின் பகிரங்கமான போராட்த்தை தடுக்கவும், சட்டத்தின் ஆட்சியை பேணவும் ஸ்கொட்லன்ட்யார்ட் தவறிவிட்டது.

பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் எதிர்ப்புப் போராட்டத்தை தடுக்க வேண்டியது ஸ்கொட்லன்ட்யார்ட்டின் சட்டரீதியான கடமையாகும். இந்த எதிர்ப்புப் போராட்டங்கள், வன்முறைகள் எதிர்காலத்தில் பிரித்தானிய அரசு மற்றும் பிரித்தானியர்களுக்கு எதிராகவும் திரும்பக் கூடும்.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச லண்டனில் தங்கியிருந்த போது அவருக்கு நட்சந்திர அந்தஸ்திலான வசதிகளை பிரித்தானிய அரசு செய்து கொடுத்திருந்தது. “ என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, மகிந்த ராஜபக்ச உரையை நிறுத்துவதற்கு கொமன்வெல்த் செயலர் ஒருதலைப்பட்சமான முறையில் மேற்கொண்ட முடிவு குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.