கொழும்பு இன்று அதிரும் - நிலநடுக்கம் அல்ல...!
இன்றையதினம் வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதேசங்களில் உணரப்படும் சிறியளவான நில அதிர்வுச் சம்பவம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர், கலாநிதி என்.பீ.விஜயானந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் விஸ்தரிப்பு பணிகளுக்காக நிலத்தின் கீழ் பாறைகள் உடைக்கப்படுவதன் காரணமாக கொழும்பை அண்டிய பிரதேசங்களில் அதிர்வுகள் உணரப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நிலத்தின் கீழ் பாறைகள் உடைக்கப்படுவதன் காரணமாக கொழும்பை அண்டிய சல பிரதேசங்களில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
நில அதிவுச் சம்பவம் தொடர்பில் புவி சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றனர். எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

Post a Comment