Header Ads



யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பெண்களுக்கு அச்சுறுத்தல் - நீதிமன்றம் வரை சென்றது..!

உதயன்

காரைநகரில் மனவளர்ச்சி குன்றிய யுவதியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கின் சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரை அவரது சேட்டைப் பிடித்து இழுத்து அடையாளம் காட்டியுள்ளளார்.

அதனடிப்படையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற சந்தேகநபர்களின் அடையாள அணிவகுப்பிலேயே குறித்த யுவதி தன்னைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று உணர்ச்சி வசப்படக் கூறி குறித்த சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் 19ஆம் திகதி காரைநகரில் இரும்பு சேகரிப்பில் ஈடுபட்ட இருவர், வீடொன்றுக்குள் சென்று தாயார் வீட்டின் பின்புறம் சென்றவேளை மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச்சென்றதாகத் தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் ஒன்றுகூடி சந்தேகநபர்கள் இருவரையும் பிடித்துப் காவற்துறையினரிடம் ஒப்படைத்திருந்தனர்.
 
புத்தளம் தில்லையடியைச் சேர்ந்த மற்றும் நீர்கொழும்பு தலுகொத்தவைச் சேர்ந்த ஆகிய இரண்டு சந்தேக நபர்களுமே இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர். வழக்கு நீதிமன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அதன்போதே பிரஸ்தாப யுவதி தன்னைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று சந்தேகநபர் ஒருவரை உணர்ச்சிவசப்பட்டு அவர் அணிந்திருந்த சேட்டைப் பிடித்து இழுத்து நீதிமன்றில் அடையாளம் காட்டினார்.

சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நேற்றைய தினம் வழக்கு நடைபெற்ற போது தமிழ், முஸ்லிம் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 இற்கும் மேற்பட்டோர் சமூகமளித்திருந்தனர். மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ், கடந்தமுறை இது சம்பந்தமான வழக்கு நடைபெற்றபோது பெண்கள் அமைப்பினர் பலர் பிரசன்னமாகியிருந்தனர். அவர்களில் முஸ்லிம் பகுதியினருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குக்குச் சென்றால் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனர் தெரிவித்தார்.

இந்த அடையாள அணிவகுப்பிற்கு 18 பேர் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.