Header Ads



மனித உரிமை அமைப்பின் ஆலோசகராக ஹூனைஸ் பாருக் எம்.பி. நியமனம் (படம்)


வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக், மனித உரிமை அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆலோசனைக் குழுவின் ஏனைய ஆலோஷகர்களாக பிரதமர்  தி.மு.ஜயரத்ன.,பாதுகாப்பு செயலாளரின் இணைப்பு செயலாளர் லெஸ்லி குணவர்தன ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்..பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்குக்கான நியமனக் கடிதத்தை மனித உரிமை அமைப்பின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் நாயகம்  கலாநிதி எம்.என்.எம்.அஸீம் வழங்கி வைத்தார்.

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் தம்பட்டை முதலியார் கட்டு கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட பாராளுமன் உறுப்பினர் தமது ஆரம்ப பல்வியினை சிலவத்துறை  பாடசாலையிலும்,அதன் பின்னர் புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியிலும் மேற்கொண்டார்.

சிறிது காலம் நுரைச்சோலை,மற்றும் ஆலங்குடா பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றிய இவர்,பின்னர் முஸ்லிம் சமய கலாகார திணைக்களத்தின் வக்பு சபையில் பணியாற்றினார்.வடமாகாண மக்களின் நல்வாழ்வுக்கும்,இலங்கை முஸ்லிம்களின் குரலாகவும் பாராளுமன்றத்திலும்,வெளியிலும் தமது பணியினை செய்துவரும் இவர் ஒரு சட்டத்தரணியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளராகவும் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனினால் நியமிக்கப்பட்டுளளார்.


No comments

Powered by Blogger.