Header Ads



வடக்குகிழக்கில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து பொலிஸாரின் எச்சரிக்கை

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் பொதிகள் தொடர்பில் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான ஏதேனும் பொருட்கள் காணுமிடத்து அது தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக வட கிழக்கில் யுத்தம் நிகழ்ந்த பிரதேசங்களில் ஆறு குளம் களப்பு கடற்கரை காடு மேடு போன்ற இடங்களிலிருந்து கண்டெடுக்கப்படுகின்ற சந்தேகத்திற்கு இடமான பொருட்களை கையாண்டதன் மூலம் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான சம்பவங்களினால் குறிப்பாக சின்னஞ் சிறுவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் உள்ளன.

இவ்வாறான சந்தேகத்திற்கு இடமான ஏதாவது பொருட்களை காணுமிடத்து அதை கையில் எடுத்து சோதனை செய்யாது இது சம்பந்தமாக உடனடியாக பெற்றோர்களுக்கு அல்லது பெரியோர்களுக்கு அறிவித்து அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ படையினருக்கோ அறியத் தருமாறு கேட்டு கொள்வதுடன் பெற்றோர் பாடசாலை அதிபர்கள் பிள்ளைகளுக்கு இது விடயமாக விழிப்பூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 

No comments

Powered by Blogger.