Header Ads



சமூகத்தை பாதிக்கும் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு எதிராக கண்டனப் போராட்டங்களை நடத்துவது முஸ்லிம்களின் கடமை

எம்.எல்.லாபிர்

சகல சமூகங்களிலும் தவறிழைப்பவர்கள் ஒருசிலர் இருக்கிறார்கள். இதேபோல் முஸ்லிம் சமூகத்திலும் ஒருவர் தவறிழைத்தார் என்பதற்காக முழு முஸ்லிம் சமூகமும் பிழையாளவர்கள் என்று கருதமுடியாது என யாழ் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா தெரிவித்தார்.

யாழ் ஒஸ்மானியாக கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இதனை குறிப்பிட்ட அவர், தொடர்ந்து தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் சமூகத்தை பாதிக்கும் செய்திகளை வெளியிடக்கூடாது. அவ்வாறான பத்திரிகைகளுக்கு எதிராக கண்டனப் போராட்டங்களை நடத்துவது முஸ்லிம்களின் கடமையாகும். குறிப்பாக காரைநகர் பாலியல் வல்லுறவு, சிறுவன் கடத்தல் வழக்குகள் நீதிமன்றில் விசாரணையின் கீழ் இருக்கும்போது பத்திரிகைகள் தன் இஷ்டப்படி செய்திகளை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

2 comments:

  1. sir ungalaipondra neethipathihal than inda nattukku thevai ungaludaiya karuthu waravetkathakkathu ....nandri

    ReplyDelete
  2. நிச்சயமாக நாங்கள் இதை செய்தாகவேன்றும். இல்லா விட்டால் இது தொடர்ந்து செல்லும் .

    ReplyDelete

Powered by Blogger.