அவுஸ்திரேலியா செல்ல முயன்று புத்தளத்தில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்
கடல்மார்க்கமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்காக வருகைதந்து புத்தளம் வைத்தியசாலைக்குப் பின்புறமாகவுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 11 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதவான் ஹேசான் த மெல் நேற்று புதன்கிழமை 13.06.2012 மாலை உத்தரவிட்டுள்ளார்.
சுட்டவிரேதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல வந்த ஒரு குழுவினர் குறித்த விடுதியில் தங்கியிருப்பதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த விடுதியை பொலிஸார் கடந்த 12ஆம் திகதி நண்பகல் முற்றுகையிட்டனர். இதன்போது அங்கிருந்த 11 பேரையும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 9பேர் மட்டக்களப்பையும், 2பேர் முல்லைத்தீவுவையும் சேர்ந்தவர்கள் எனவும் புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டனர். இவர்களை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்த நபர் இணங்கானப்பட்டிருப்பதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரும் நேற்று 13.06.2012 மாலை புத்தளம் மாவட்ட நீதவானின் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment