லண்டனில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் (படங்கள்)
பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
பிரித்தானிய மகாராணியாரின் வைர விழா கொண்டாட்டங்கள் லண்டனில் பல்வேறு இடங்களில் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாரியாருடன் லண்டன் வந்திருக்கிறார்.
இந்த விஜயத்தின் போது, அவர் பக்கிங்ஹாம் மாளிகையில் நடக்கும் விருந்திலும், புனித போல் தேவாலயத்தில் நடக்கும் நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்.
அதேவேளை திங்களன்று ராஜபக்ஷ அவர்கள் தங்கிருப்பதாகக் கூறப்படும் விடுதிக்கு எதிராக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதில் ஒன்று அவருக்கு எதிராகவும் அடுத்தது ஆதரவாகவும் நடந்தது. இரண்டிலும் சிலநூறுபேர் கலந்துகொண்டிருந்தார்கள். இரு தரப்பிலும் கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போடு சற்று குறைவானதுதான்.



Post a Comment