இலங்கை சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாவுக்கும் 81 சதத்தை கடன் செலுத்துகிறதாம்
சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பொறிக்குள் இலங்கையை சிக்க வைத்துள்ளதாகவும் இதனால் இலங்கை சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாவுக்கும் 81 சதத்தை கடன் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏகாதிபத்திய மக்கள் இயக்கத்தினால் மேலும் தெரிவிக்கப்பட்டுளள்ளதாவது,
2009 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலரை கடனாக வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்தக் கடன் தொகையினை தவணை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு ஒவ்வொரு தவணையின் போதும் தங்களின் தேவைகளுக்கு ஏற்றாற் போல் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு நிபந்தனைகளையும் விதித்து வந்தது.
இந்நிலையில் அந்தக் கடன் தொகையின் இறுதித் தவணைக் கொடுப்பனவு இம் மாதத்தில் வழங்கப்படவுள்ளது. இதற்காக இலங்கையில் பொருளாதார நிலைமைகளை ஆராய்வதற்கென சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இங்கு வருகின்றனர்.
இவ்வேளையில் இறுதி தவணை கடன் தொகையினை பெற்றுக் கொள்வதை விட அரசாங்கத்திடம் வேறு எந்த மாற்று வழிகளும் கிடையாது. இதற்காக நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டும்.
இது ஒரு புறமிருக்க இறுதித தவணைக் கடன் தொகையை பெற்றுக் கொண்டதும் அதற்கு மேலதிகமாக 500 மில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய வங்கியின் அறிக்கையின் படி 2011 ஆம் ஆண்டில் இறுதியில் இலங்கையின் அடைக்கப்படாத கடன் தொகையாக 513,336 கோடி ரூபா காணப்பட்டது.
இது கடந்த 5 மாத காலப் பகுதிக்குள் மேலும் அதிகரித்துள்ளது. இதன் பிரதி பலனாக இலங்கை சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாவுக்கும் 81 சதத்தை கடன் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இலங்கை எவ்வாறான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதென்பதனை இதன் மூலம் தெரிந்து கொள்ளமுடியுமாக இருக்கும்.
இவ்வாறான நெருக்கடி நிலைக்குள்தான் அரசாங்கம் மேலும் 500 மில்லியன் டொலரை கடனாகபப் பெற முயற்சிக்கின்றது. இதன் படி இலங்கையின் பொருளாதாரம், கடன் வரி, தண்டப்பணம் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது என்பது தெளிவாகின்றது.
இதற்கு நாட்டில் உற்பத்தி பொருளாதாரம் வளர்ச்சியடையாமையே பிரதான காரணமாக அமைந்துள்ளதெனலாம், “பயிர் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம், திவிநெகும, போன்ற போலி வீணான பிரசார வேலைத் திட்டங்களே உள்ளன. இதனைத் தவிர நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களேது÷ அரசாங்கத்திடம் கிடையாது.
தேசிய பொருளாதாரம் தொடர்பாகவும் பொருளாதார அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்பது தொடர்பாகவும் அரசாங்கம் கதைக்கின்ற போதும் இலங்கையில் பொருளாதாரம் எப்படியிருக்க வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியமும், ஏகாதிபத்தியவாதிகளுமே தீர்மானிக்கின்றனர்.
பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கத்திற்கு அக்கறையில்லாமையினால் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்க முடியாது, உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலகிச் செல்கின்றனர்.
இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஏற்றுமதியின் மூலம் 10,487 கோடி ரூபா இலாபம் கிடைத்த தோடு இறக்குடதிபக்காபக 20,230 கோடி ரூபாவை செலவிட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்படும் நட்டங்களை நிவர்த்தி செய்வதற்காகவே கோடிக்கணக்கில் கடனைப் பெற்று சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கித் தவிக்கின்றது.
Post a Comment