Header Ads



அமெரிக்காவின் தடையிலிருந்து இலங்கை விடுபட்டது

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை குறைத்துக் கொண்ட இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு நிதி தடைகளில் இருந்து விலக்களிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் வெளியிட்டுள்ளார்.

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதித் தடைகளுக்கு அமைய, இந்தியா, மலேசியா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, இலங்கை, துருக்கி, தாய்வான் ஆகிய நாடுகள் ஈரானிடம் இருந்த எண்ணெய் கொள்வனவு செய்வதை கணிசமாகக் குறைத்துக் கொண்டுள்ளதை உறுதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா கொண்டு வந்த எண்ணெய் ஏற்றுமதி தடையை ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இந்த நாடுகளின் பட்டியலில், ஈரானின் நெருங்கிய நட்பு நாடான இலங்கையும், அமெரிக்கா இணைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.