பிரித்தானியாவில் இலங்கை பிக்குவுக்கு 7 ஆண்டுகால சிறைத் தண்டனை
பிரித்தானியாவில் வயது குறைந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய சிறிலங்காவைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. லண்டன், குறோய்டனில் உள்ள தமெஸ் பௌத்த விகாரையின் விகாராதிபதியான பகலகம சோமரத்ன தேரருக்கே லண்டன் நீதிமன்றம் இந்த தண்டனையை நேற்று விதித்தது.
1978-79ம் ஆண்டு காலப்பகுதியில் இந்த பௌத்த பிக்கு முதல்முறையாக லண்டன் வந்தபோது, கிழக்கு லண்டனில் உள்ள பௌத்த ஆலயம் ஒன்றில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து கடந்தமாதம் நீதிமன்றம் இவரைக் குற்றவாளியாக அறிவித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இந்தப் பிக்குவுக்கு நேற்று நீதிபதி தண்டணையை அறிவித்தார்.
அத்துடன் இந்த பௌத்த பிக்குவை பாலியல் குற்றவாளிகளின் பட்டியலில் காலவரையறையின்றி வைத்திருக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 65 வயதான இந்த பௌத்த பிக்குவை சிறார்கள் தொடர்பான எந்தச் செயற்பாடுகளில் இருந்தும் விலகியிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Appidi Podu Britain come back to Ceylon again inthe pichchukalai oru kai paarthidalaam
ReplyDelete