Header Ads



கல்முனையில் ஐஸ்கிறீம் சாப்பிட்ட 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

TM

கல்முனை பாண்டிருப்பில் திருமண நிகழ்வொன்றிலும் பிறந்த தின வைபவமொன்றிலும் ஐஸ்கிறீம் உட்கொண்ட சுமார் 50 பேர் உடல் உபாதைகளுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் சிறுவர்களும் அடங்குகுகின்றனர். இப்பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றிலிருருந்து ஐஸ்கிறீம் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்

No comments

Powered by Blogger.