Header Ads



பேஸ்புக் நிறுவனருக்கு 5 பில்லியன் நஷ்டம் - 3 யூரோக்கு பேக்கர் வாங்கிச சாப்பிட்டார்



பேஸ்புக் ஸ்தாபகரான  மார்க் சூக்கர் பேர்க் தனது பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளை கடந்த சில தினங்களுக்கு முன் பொதுச் சந்தையில் விற்கத் தொடங்கினார். எனினும் எதிர்பாராத  விதமாக அவருக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் உலகத்  தரவரிசையில் 22  ஆவது இடத்திலிருந்து 41 ஆவது இடத்துக்கு சென்றுவிட்டார். பொது வர்த்தக சந்தையில் பங்குகள் விற்பனையில் அதிக நஷ்டத்தை சந்தித்த முதல் இணையத்தளமாக  பேஸ்புக் உருவாகியிருந்தது.

ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாது அண்மையில் இரகசியமாக திருமணம் செய்து கொண்ட தனது நீண்ட நாள் காதலியை அழைத்துக் கொண்டு இத்தாலிக்கு தேனிலவுக்காக சென்றுவிட்டார்.

சாதாரணமாக உல்லாசப் பயணிகள் போல் மக்களுடன் கலந்து கொண்டமையால் இவர்கள்  யாரென்பதே பலபேருக்கு தெரிந்திருக்கவில்லை.  மெக்டானல்ட்  உணவகத்தில் 3  யூரே பெறுமதியான பேர்கர் வாங்கி இருவரும் சாதாரணமாக சாப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. இதெல்லாம் ஒரு செய்தியா?

    ReplyDelete

Powered by Blogger.