Header Ads



இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 48 இலங்கையர் அகதி முகாம்களில்..!

வட இத்தாலியில் கடந்த 20 ஆம் திகதி ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட 48 இலங்கையர்கள் அங்குள்ள முகாம்களில் தங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் ஷேலிவே நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் 6 சிறுவர்கள் உட்பட 26 பேரும் மிரிந்தோலாவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் 3 சிறுவர்கள் உட்பட 12 பேரும் மிதொலாஹி முகாமில் 5 பேரும் பினாலே ஏமிலியானி முகாமில் 2 பேரும்,பொம்பொரேதொ முகாமில் 3 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களை விரைவாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக இலவசமாக விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள இலங்கைத் தூதுவரை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.