Header Ads



மோசமான உணவு பழக்கத்தால் 32 பற்களுக்கு பதிலாக 28 பற்கள்தான் முளைக்கிறதாம்


இயற்கையில் மனிதர்களுக்கு 32 பற்கள் முளைக்கின்றது, ஆனால் தற்போது உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தாடை எலும்புகள் குறுகி விடுவதால்  தற்போது ஞானப்பற்கள் (விஸ்டம் டூத்)  முளைக்காமல் 28 பற்களே முளைக்கின்றது. 

இதுகுறித்து பல் மருத்துவர்கள் செந்தில்பாண்டியன், ரிஜேஷ் கூறுகையில்,

‘‘தற்போது மக்களிடையே அரைத்து உண்ணும் பழக்கம் இல்லாமல் அவசரகதியில் பெரும்பாலும் மென்மையான உணவு பொருட்களை உண்ணுகின்றனர். இதனால், தாடை எலும்புகள் குறுகி தாடை சின்னதாகி விடுகிறது. இதனால் ஞானப்பற்கள் முளைப்பதற்கு இடமில்லாமல் போகிறது. பச்சை காய்கறிகள், தானிய வகை, பயறு வகைகளை உண்ணும் போது இத்தகு பிரச்னைகள் ஏற்படாது’’ என்றனர்.

No comments

Powered by Blogger.