மானநஷ்ட ஈடாக 250 மில்லியன் ரூபா வழங்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவு
AD
தளதா மாளிகையின் தியவதனே நிலமேக்கு 250 மில்லியன் ரூபா வழங்கும் படி தேசிய சொத்துக்கள் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நிலங்க தால பண்டார, தியவதனே நிலமேயினால் தாக்கல் செய்யப்பட்ட மானநஷ்ட வழக்கிற்கே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தளதா மாலிகையில் இருந்த புதிய தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை ஒன்றை காணவில்லை என தேசிய சொத்துக்கள் பாதுகாப்பு நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது எனவும் இது தொடர்பான செய்தி பல ஊடகங்களில் வந்தது எனவும் தெரிவித்து தியவதனே நிலமே இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
தேசிய சொத்துக்கள் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட இந்த தகவலின் மூலம் தனது கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து மானநஷ்ட வழக்கை தொடுத்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தியவதனே நிலமேக்கு 250 மில்லியன் ரூபாய்களை தேசிய சொத்துக்கள் பாதுகாப்பு நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

Well done,
ReplyDeletesurprise,surprise law and order is still alive in
sri lanka ?????????????????????
Jamal
What about other religious people as aalim. ulamaa is this still applicable
ReplyDelete