ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தற்கொலை தாக்குதல் - 21 பேர் மரணம், 50 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படையினர் மீது தலிபான் மற்றும் அல்கொய்தாகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கோஸ்ட் மாகாணத்தில் ஸ்பினட ஜெமாத் பஷார் என்ற இடத்தில் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனை சாவடி உள்ளது.
இங்கு தலிபான் மற்றும் அல்கொய்தாகள் ஊடுருவியுள்ளனரா? என்பதை அறிய அப்பகுதி மக்களிடம் அடையாள அணி வகுப்பு மற்றும் கைரேகை சோதனைகளை ராணுவ வீரர்கள் நடத்தி கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலைவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தார்.
அதில் 21 பேர் உடல் சிதறி பலியாகினர். அவர்களில் 3 பேர் அமெரிக்க ராணுவ வீரர்கள். அவர்கள் தவிர பொதுமக்களும், குழந்தைகளும் அடங்குவர். மேலும் போலீஸ்காரர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment