ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - கிராமமே புதைந்து 100 க்கும் மேற்பட்டடோர் மரணம்
ஆப்கானிஸ்தானில் இந்து குஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பக்லான் மாகாணத்தில் புர்கா மாவட்டத்தில் உள்ள சாயி ஹசாரா என்ற மலை கிராமம் மண்ணுக்குள் புதைந்தது.
இதனால் அங்கிருந்த சுமார் 35 வீடுகளை மண் மூடியது. தகவல் அறிந்ததும் அங்கு போலீசாரும், ராணுவ வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வீடுகளை மண் மற்றும் மலை பாறைகள் மூடியுள்ளதால் மீட்பு பணிகள் நடைபெறுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.
எனவே, புல்டோசர்கள் மற்றும் அதி நவீன எந்திரங்கள் மூலம் மண்ணை அகற்றும் பணி நடக்கிறது. இதுவரை ஒரு பெண் உள்பட 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்ததால் பலி எண்ணிக்கை 100-க்கு மேல் இருக்கும் என அஞ்சப்படுகிறது. நில நடுக்கம் காரணமாக சாயி ஹசாரா கிராமம் மட்டுமல்ல. மலை பகுதியில் உள்ள 5 மாவட்டங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணுக்குள் புதைந்து கிடப்பதாக ஐ.நா.சபை உறுதி செய்துள்ளது. இங்கும் மீட்பு பணி நடைபெறுகிறது

aafkaan makkalukku enna saapmo............ iraivanum alikkiraan....... payangaravaathi thalibaankalum alikkiraanukal.... kiristawa padai kalum alikkiraanukal...
ReplyDeleteENNA KODUMAI SAAAAAAAAR