Header Ads



ஒபாமா + ஹிலாரி பற்றி தகவல் அளித்தால் 10 ஒட்டகங்கள் பரிசாக வழங்கப்படும்


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் எங்கிருக்கிறார்கள் என்று தகவல் அளித்தால் அவர்களுக்கு கோழிகளும், ஒட்டகங்களும் பரிசாகத் தரப்படும் என்று அல்காய்தா அமைப்புடன் தொடர்புடைய சோமாலிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய  அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஷபாப் அல் முஜாகிதீன் அமைப்பின் முகமது காலஃப் என்பவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக எஸ்ஐடிஇ உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு இஸ்லாமிய அமைப்புகளை கண்காணித்து வருகிறது.

ஒபாமாவின் மறைவிடம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஒட்டகங்களும், ஹிலாரியின் மறைவிடம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 கோழிகளும், 10 சேவல்களும் பரிசாக அளிக்கப்படும் என அவர் கூறியதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக வியாழக்கிழமையன்று காலஃப் மற்றும் அவருடைய 3 சகாக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்திருந்தது. அதற்கு பதிலடியாக ஷபாப் இவ்வாறு கேலியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. (தினமணி)

1 comment:

  1. ஊடக அராஜகம் செய்து, ஜமாத்தே இஸ்லாமிக்கு சார்பான கருத்துக்களை மட்டும் வெளியிட்ட யாழ் முஸ்லிமின் மறைவிடம் பற்றி தகவல் தருபவர்களுக்கு
    5 ஒம்லட்களும் 5 அவித்த முட்டைகளும் பரிசாக வழங்கப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.