சக்தி வாய்ந்த அன்னையர்களா இவர்கள்..??
முக்கிய பொறுப்பு வகிக்கும் சக்தி வாய்ந்த அன்னையர்களின் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் பெயரை, பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.
பெரிய பதவிகளை வகிக்கும் பெண்கள், தங்கள் வேலைகளுக்கிடையே, குழந்தைகளையும் நல்ல முறையில் பராமரிப்பது வருகின்றனர். நேற்று, அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக, "போர்ப்ஸ்' பத்திரிகை, உலகம் முழுவதும் உள்ள சக்தி வாய்ந்த அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன். இவரின் மகள் செல்சியா. தன் ஒரே மகளை, பொறுப்போடு வளர்த்து திருமணம் செய்து கொடுத்த வகையில், ஹிலாரி முதலிடத்தை பெற்றுள்ளார்.
பாசத்தாய் நூயி:பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரூசப். மாஜி புரட்சி பெண்ணான தில்மா, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட போதும், தன் ஒரே மகளை, நல்ல முறையில் வளர்த்துள்ளார் என்பதற்காக, சக்தி வாய்ந்த அம்மா பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயி,56. இவர், பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். கம்பெனியின் முக்கிய நிர்வாகக் கூட்டத்தில் இருக்கும் போது, மகள்களிடமிருந்து அழைப்பு வந்தால், உடனடியாக அவர்களிடம் பேசி விட்டுத் தான் கூட்டத்தை தொடர்வார். பாசமிகு தாய் என்ற விதத்தில், இவர், பட்டியலில் மூன்றாவது இடத்தை வகிக்கிறார்.
பட்டியலில் சோனியா:ராஜிவ் மறைவுக்கு பிறகு, ராகுலையும், பிரியங்காவையும் அரவணைத்து செல்லும் தாய் என்பதால், சோனியாவுக்கு இந்த பட்டியலில், ஆறாவது இடம் கிடைத்துள்ளது. மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவர் அவுங் சான் சூச்சி, 20வது இடத்திலும், ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஏழாவது இடத்திலும் உள்ளனர். பில்கேட்சின் மனைவி மெலிண்டா, சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டியன் லகார்டி ஆகியோரும், சக்தி வாய்ந்த அன்னையர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் .இவர்களா, குழந்தைகளை வளர்த்திருப்பார்கள்?அந்தப்பெருமை குழந்தைகளை
ReplyDeleteவளர்த்த செவிலித் தாயமார்களுக்குத்தான் கிடைக்க வேண்டும் .ஹிலாரி ,கிளின்டனையே ஒழுங்காக கவனிக்கவில்லை ,அதனால்தானே வேலி பாய்ந்தார் .இதெல்லாம் உலகமயமாக்களில் நடக்கும் நாடகங்கள் .
அமெரிக்காவின் சரிந்து செல்லும் சகல விடயங்களையும் தூக்கி நிறுத்த ஏதாவது செய்யத்தானே வேண்டும் .
உண்மையான தாயும் ,தகப்பனும் யார் என்றால் குழந்தைகளைப் பெற்று ஷாலிகான வழியில் வளர்த்து
திருமணம் செய்து வைக்கிறார்களோ அவர்கள் தான் .அதேவேளையில் சில குழந்தைகள் வழி தவறியும்
சென்றுவிடுகிறது .இதற்குத்தான் அல்லாஹ் விதியை நம்பச் சொல்கிறான் .நாம் விதியை நம்புவதால்தான்
நம்மில் தற்கொலை சாவுகள் இல்லாமல்லிருக்கிறது .மார்க்கம் தெரியாத ஒன்று இரண்டுகள் காசுக்காக
அரசியல் வியாபாரத்திட்காக தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.தற்கொலை இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட
செயல் .ஆனால் போராட்டத்தில் அல்லாஹ் அறிந்தவன் .
Meeraan
தனக்குப் பிடிக்காத இனங்களை கருவறுக்கும் தொழிலைக் கற்ற, சக்தி வாய்ந்த அன்னையர்கள் இவர்கள்.
ReplyDelete