Header Ads



தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகை நடாத்த தடை..?


தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் குர்ஆன் மதரஸா தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை, 27 ஆம் திகதி நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது.

முஸ்லிம்களுக்கும் சிங்கள கடும்போக்காளர்களுக்கு தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை பிரதேச பொலிஸார்
மேற்கொண்டிருந்தனர்.

தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மத்தஸா தெஹிவளை கல்கிசை மாநகர சபையில் 2002 ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வக்பு சபையில் மஸ்ஜித்தாகவும் 1999 ஆம் ஆண்டு மஸ்ஜித்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதும் குறித்த பகுதியில் மத்ரஸா மாத்திரமே இயங்க வேண்டுமெனவும், பள்ளிவாசல் இயங்கக்கூடாதென சிங்கள் கடும்போக்காளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அறியவருகறது.



6 comments:

  1. நம்ரூத், பிர் அவ்ன் போன்றோர் அல்லாஹுவிக்கு எதிராக செயல்பட்டது போல் இவர்கள் நடந்து கொள்கின்றனர். அல்லாஹுவின் தண்டனையை விரைவில் எதிர்பர்க்கட்டும்

    ReplyDelete
  2. Vilakku/meluguvatti anayumunbe athiga prakaasathudan oli tharumaam athupolaththaan inthe kaaday arasum penkal siuvarkal podiyankal molesting and secret sex in pansala will be end soon Allahumma ahissal Islam.wa hammer aduw/ahdaa almuslimeen wall Islam wansurna alal qaumil qaafireen

    ReplyDelete
  3. இப்படியே போனால் இன்னும் எத்தனை பள்ளிவாசல்கள் மூடப்படுமோ? மதுசாலைகள்,விபச்சார விடுதிகள் எவ்வளவோ இப்பகுதிகளில் இயங்குகின்றன இவற்றை அனுமதிக்கும் வெறியர் கூட்டத்துக்கு புனித இடங்களான மஸ்ஜிதுகள் மட்டுமா கண்களுக்கு தெரிகின்றன?. எமது அரசியல்வாதிகளும் சமூகத்தலைமைகளும் நாட்டின் அதிகாரத்தரப்பினருடன் இவ்விடயமாக உரிமையுடன் பேசி நம் உரிமைகளை பாதுகாக்க முன்வரவேண்டும். மியன்மார்(பர்மா) பக்கம் வீசிய பௌத்த வெறிக்காற்று இப்போது இலங்கை பக்கம் வீசுதோ?. இப்னு பாஸ்கான்.

    ReplyDelete
  4. The message is that you cannot perform prayer or you cannot obey your head for Allah in this land. This has happened in Ariyasinhala of Kurunegala and now in Dehiwala ( It is second time in dehiwala, already they succeeded to close down a masjid in Kadawata road of Dehiwala).Allah is enough for us and we shuld seek the help from allah through patient and salath.

    ReplyDelete
  5. ஏன் ஜனாதிபதி இந்த விடயம் பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசுறது இல்லை?உதரணமாக ஆரம்பத்தில் எங்கயும் சிறு சிறு பள்ளிகொடம்மஹவோ அல்லது அதற்கு பிறகு தேவை சமுஹதுக்கு ஏற்ற வரு மாற்றி அமைப்பது ஒரு குற்றமா?இந்த பிரதேசில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் குறைவாகவும்,இப்போது அது கூடிய எண்ணிக்கையாக மாறி இருக்கின்றன எனவே தான் பெரிதாக வேண்டிய கட்டம் தேவை.இவைகள் சிறிலங்காவில் மட்டும் நடக்குறது இல்லை உலக நாடுகளில்லும் அடிப்படையாக நடக்குற விசயம்,இது யாரும் புரிந்து கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  6. நாட்டில் மன்னர் மகிந்தாவின் ஆட்சியா?தேரர்களின் ஆட்சியா?ஒண்ணுமே புரியலேயே!ராஜ பக்ஸ குடும்பமும் காவியை உடுத்தி இங்கு காவி ஆட்சிதான் என்று உலகறியச் செய்யலாமே.தனித் தமிழ் ஈழம் என்றவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்.பௌத்த நாடு என்று கனவு காணும் காவிக்கூட்டமும் ஏதோ ஒரு அந்நிய நாட்டுக்கு அடிமையாக போகிறது.ஊர்வலம் என்று சொல்லும்போதே தடுத்து நிறுத்த வக்கில்லாத ஆட்சிதானே நடக்கிறது.ஹக்கீமுக்கு முதலமைச்சர் பதவிதானே
    முக்கியம்.என்னவிலை கொடுத்தாவது வாங்கிக் கொடுத்து அவரின் கனவை நிறைவேற்றி நாம் அனைவரும் அல்லாஹ்விடத்தில் நன்மையைப் பெற்றுக் கொள்வோம்.
    தேரர்களை விட பெரும் ஆட்டம் ஆடயவர்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மண்ணோடுமண்னாகி விட்டார்கள்.இவர்கள் எம்மாத்திரம்.
    ஆளும் தரப்பு நம் உணர்ச்சிகளை தூண்டி,நாமும் ஆயுதம் தூக்குகிறோமா நமக்குள் ஏதாவது ஆயுதக்குழுக்கள் இருக்கிறதா என்பதை கண்டுகொள்ளுவதட்காக யூத,அமெரிக்காவின் திட்டப்படி சகலதும் நடந்தது,நடக்கிறது,நடக்கப்போகிறது.இதுதான் நிதர்சனமான உண்மை .
    ஆகவே முஸ்லீம்களே அல்லாஹ்வுக்காக பொறுமையை கடைப்பிடித்து இறையிடம் தொழுது துஆ கேட்போம்.பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.ஆளுக்கொரு Web Site திறந்து நம்மை நாம் கலுவிக்கொண்டிருக்காமல்,மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எத்திவையுங்கள்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.