படிக்கும் காலங்களில் இன ரீதியான சித்தாந்தங்களுக்கு செவிசாய்க்காதீர் - அமைச்சர் றிசாத் (படம்)
வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
அரசாங்கத்தின் இலவச கல்வியை பெற்றுக் கொண்ட நாம் நாட்டுப்பற்றுக் கொண்டவராக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த கல்விக்கு அரசு செலவு செய்யும் நிதி இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதனது பங்களிப்பாகும் என சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இதன் மூலம் அடையும் பதவிகள் சகல சமூகத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற நியாயத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
வன்னி மாவட்டத்தில் உள்ள மன்னார்,முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் இருந்து 2011 ஆம்,2100 ஆம் கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டு கற்றலில் ஈடுபடும்,249 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை வவுனியா ஸ்ரீ சிந்தாமணி ஆலய கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்; பாருக்,வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் ஷரீப் மொஹிதீன்,அமைச்சரின் இணைப்ப முத்து முஹம்மத்,அரசாங்க அதிபர்கள்,கல்வியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். வவுனியா அரசாங்க அதிபர் பணிமனை இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.அங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் பேசுகையில்,
இலங்கையில் மாறி மாறி ஆட்சிகளுக்கு வந்த அரசாங்கங்கள் தொடராக இலவசக் கல்வினையே வழங்கிவருகின்றது.வருடமொன்றுக்கு மாணவர்களின் பாடசாலை சீரூடைகளுக்கென 1250 மில்லியன் ரூபாய்களையும்,பாடசாலை புத்தகங்களுக்கென 2500 மில்லியன் ரூபாய்களையும் செலவு செய்து வருகின்றது.
அதே போல் கல்வி மேம்பாடுகளுக்காக உட்கட்டமைப்பு வசதிகளுக்கென பல கோடி ரூபாய்களை செலவு செய்து சிறந்த மனித நேயமிக்கவர்களை உருவாக்குவதினை இலக்காக கொண்டு செயற்படுகின்றது.ஆனால் வெளிநாடுகளை குறிப்பாக தெற்காசிய நாடுகளில் கற்கும் மாணவர்கள் பணம் கொடுத்து பாடசாலைகளினை உருவாக்குகின்றனர்.
ஒரு மாணவனை பொறுத்த வரையில் அவனது இலக்கு தாம் நல்லதொரு கல்விமானாக ,பதவிகளை பெற்று மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும்.ஆனால் துரதிஷ்டம் நமது நாட்டு பல்கலைக்கழகங்களில் சிலர் கற்றல செய்றபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்காமல்,தெவையற்ற விடயங்களில் தம்மை ஈடுபடுத்தி,தமது காலங்களை வீனப்பதை கானுகின்றோம்.வன்னி மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ள நீங்கள் தூர சிந்தனையுடன்,தெளிவுடன் இருக்க வேண்டும்.
கடந்த 30 வருட கால அழிவினை ஒரு முறை மீளப்பாருங்கள்,நாம் இழந்தவை எத்தனை,இன்று எம்மில் இந்த கொடிய யுத்தத்தால் அவதியுறுபவ்களின் எண்ணிக்கையினை பாருங்கள், அங்கவீனவர்களாக, விதவைகாளக,தடுப்பு முகாம்களில் இருப்பவர்களாக ,தமது மண்ணை துரந்தவர்களாக ஈரக்கின்றதை கவனத்திற் கொள்ள ணேவ்டும்.இது ஒரு படித்த சமூகத்தின் மூலம் தான் பொதுமக்கள் மத்தியில் எடுத்து செல்ல முடியும்.இந்த கோர அழிவுகளை மீள ஏற்படுத்தாமல் இரப்பதற்கான தெளிவான சிந்தனையினையும் மாணவர்காளகிய நீங்கள் உள்வாங்க வேண்டும்.
படிக்கும் காலங்களில் இன ரீதியான சித்தாந்தங்களுக்கு செவிசாய்க்காது,சகலரும் மனிதர்கள்,இலங்கையர்கள்,எமது நாட்டவர்கள் என்ற பார்வையினை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இன்று எமக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி சிந்தனை ரீதியான யுத்தத்தை தோற்றுவித்து அதன் மூலம் குறுகிய அரசியல் லாபம் கானும் சில விஷமிகள் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.இவர்களின் திட்டங்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இடம் கொடுக்க கூடாது.
இன்று எத்தனையோ பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை இழந்து பரிதவிக்கின்றனர்.ஒழுக்கம்,கட்டுப்பாடு,கடப்பாடு என்பனவற்றை உள்ளத்தில நிறுத்தி சிறந்த தலைவர்களாக நீங்கள் மாற வேண்டும் என்பது என அவவாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.




Post a Comment