Header Ads



கிழக்கு மாகாண சபை தேர்தலில் புதுமுகங்களை களமிறக்குகிறது முஸ்லிம் காங்கிரஸ்..!


நன்றி  - தினக்குரல்

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுமாக இருந்தால் பல புதிய முகங்களை வேட்பாளராக களமிறக்குவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவது உறுதியாக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் தெரிவு தொடர்பாக  அக் கட்சி மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.

இதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில்  இணைந்து  கொண்ட ஹாபிஸ் நஸீர்  அஹமட் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரின் புதல்வர் றஹ்மத் மன்சூரை கல்முனை சார்பாகவும் சம்மாந்துறை சார்பாக சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிரையும் சாய்ந்தமருது சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  சிரேஷ்ட பிரதித் தலைவர் அப்துல்  மஜீத்தையும் அட்டாளைச்சேனை சார்பாக கட்சியின் ஸ்தாபக பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரையும் களமிறக்குவதற்கு மு.கா.தலைவர் விரும்பியுள்ளதாக தெரியவருகின்றது.

கல்முனை பிரதேசத்தில் மு.கா. சார்பாக உள்ள மாகாண சபை உறுப்பினர் களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில் அவர்களை மீண்டும் களமிறக்கி கட்சியை தோல்வியடையச் செய்ய ஹக்கீம் விரும்பவில்லை என்றும் அதனாலேயே புதிய முகங்களை களமிறக்குவதற்கு அவர் யோசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ் மீராசாஹி களமிறக்கி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை மேயராக்கும் ஒரு திட்டமும் முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்டத்திடம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க முதலமைச்சர் வேட்பாளராக ஹாபிஸ் நஸீர் அஹமட் அல்லது மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதித் தவிசாளரும் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகருமான எம்.அப்துல் மஜீத் ஆகிய இருவரில் ஒருவரை நியமிப்பதற்கும் ரவூப் ஹக்கீம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான முடிவில் இருக்கின்ற போது பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவுத் அலிசாஹிர் மௌலானாவை முதலமைச்சராக்குவதற்கு விரும்பியுள்ளதாகவும் அது தொடர்பாக மிக இரகசியமான முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை  அவர்கள் இருவரும் சந்தித்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இந்த விடயம் மு.கா. தலைவருக்கு எட்டியுள்ளதாகவும் இதனாலேயே ஹாபிஸ் நஸீரை களமிறக்குவதற்கு ஹக்கீம் உறுதியாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மு.கா. மாகாண சபை உறுப்பினர்களாக உள்ள கல்முனை ஜவாத்தும் சாய்ந்த மருது ஜெமீலும் தங்களுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்காவிட்டால் அமைச்சர் அதாவுல்லாவுடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

10 comments:

  1. ஹாபிஸ் நஸீர் பிறந்த ஊரான ஏறாவூரில் கூட அவர் யார் என்று தெரியாது ஏன் என்றால் தேர்தல் வந்தால் மட்டும் ஊருக்கு வந்து 1000 அல்லது 2000 கொடுத்து எனக்கு வோட் போடுங்கள் என்று கொடுத்து விட்டு தேர்தலில் தோற்றதன் பின்னர் கொழும்பு சென்று பின்னர் தேர்தல் வந்ததன் பின்னர் ஊருக்கு வருபவர் எவ்வாறு முதலமைச்சர் வேட்பாளர் வேடிக்கையாக இருக்கின்றது. இவர் ஊரில் நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் கூட ஒரு அங்கத்தவராகக் கூட தெரிவாகாதவர் எவ்வாறு???? ஏன் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இவ்வாறு சரியானமுறையில் ஆராயாமல் இவ்வாறு முடிவு எடுக்கின்றது. முஸ்லிம் காங்கிரசை இன்னும் மோசமாக்கவா? சிந்திப்பாரா தலைவர்???????????

    ReplyDelete
  2. ''எமக்கு போட்டியிட வாய்ப்பு தராவிட்டால், இன்னொரு அணியில் போட்டியிடுவோம், சுயேட்ச்சையாக போட்டியிட்வோம்'' என சிலர் புறப்படுவது, ''முஸ்லிம் முதலமைச்சர்'' என்பதனை மீண்டும் ஒருமுறை கானல் நீராக்கவே உதவப் போகின்றது.

    ReplyDelete
  3. SSP or Alizahir Moulan is good for CM,Plz try to understand Mr.Hakkeem

    ReplyDelete
  4. கிழக்கு மாகாணம் என்பது அதிகமான முஸ்லிம் ஊர்களைக் கொண்ட ஒரு மாகாணம்.
    ஒவ்வொரு ஊராருக்கும், தமது ஊரிலிருந்து முதலமைச்சர் வர வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும்.
    இந்த ஆசையை பயன்படுத்தி, முஸ்லிம்களை கூறுபோட எதிரிகள் முயலலாம், முஸ்லீம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.


    முக்கிய நோக்கம் ''முஸ்லிம் முதலமைச்சர்'' என்பதே தவிர, ''எமது ஊரிலிருந்து ஒரு முதலமைச்சர்'' என்பதல்ல.

    ஒவ்வொரு ஊராரும் தமது ஊரில் தாம் தகுதியானவராக காண்பவரை கட்ச்சித் தலைமைக்கு பிரேரிக்க வேண்டும்,
    ஆனால் முடிவில் பிரிந்து விடக் கூடாது. கட்ச்சித் தலைமையும், உயர் பீடமும் ஒருவரைத்தான் தெரிவு செய்ய முடியும்.
    அந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. It has already been decided that ali sahir will be the government chief minister candidate. Minister murali, athavulla, hisbullah, current chif minister chndrakanth agreed it and also some muslim congress party members including Bashar segudawood support this. but SLMC leader tried to promote his business partner naseer ahamed for the post. Also some SLMC members led by nizam kariyapper sugested SLMC should support TNA+UNP opposition alliance in the poll. Nizam kariyapper will the chief minister candidate in that alliance. It is known that TNA and UNP are agreeable to put common opposition alliance with the muslim CM candidate. they seek to get a suitable SLMC member for that and decided that Nizam kariyapper is the one to use. We can expect many political changes in the coming month. one thing is certain whatever the way it goes SLMC will be further broken.

    ReplyDelete
  6. குட்டக்குட்ட தலையைக் கொடுப்பதற்கு முஸ்லிம்கள் இன்னும் தயாரில்லை... புதியதொரு அரசியல் மாற்றமே இன்றைய பலரின் எதிர்பார்பபும் , வரவேற்புமாக இருக்கிறது.

    நம்பி ஏமறுதல்களை அவழ்த்துவிட்டு உறுதியாக நமக்கய் இயம்புவோம்...

    ஒரு சிலரின் கூத்தாட்டங்களுக்கு முழு முஸ்லிம் சமுகமும் பலிக்கடாவல்ல... இதனை அனைவரும் புரிதல் அவசியம்..... (எவருக்கும் சாயவுமில்லை... எவரையும் சாடவுமில்லை)

    ReplyDelete
  7. Hafess Nazeer joined the party only recently. How come he would be nominated as CM candidate. It is a joke. I feel that this a false media statement. Basheer Segu Dawood is the Chairman of the SLMC how come he could agree to nominate Ali Zahir as the CM candidate who is from the PA party rediculous yeah. JAMEEL & Jawaadh are sitting members of Eastern Provincial Council how come they don't get a chance to contest unless they refuse. Guys first think this might be a false media statement which is creating unnecessary disputes within the party members. I personally feel that SSP Majeed is the capable person to be a Chief Minister of the Eastern Province. He has been the Security Coordinating Officer for whole Eastern Province in his tenure of work. So he will know better things as a normal citizen as well as a politician.

    ReplyDelete
  8. I do agree with Brother Fairu. He is not only known by Eastern province people All Ceylon Know about him. When he work in Jaffna,Trinco,Kandy and Colombo as a Director of National intelligent bureau( NIB)
    Eastern province co-ordinator
    Rugby Sri Lankan captain

    ReplyDelete
  9. ssp majeed well known man in srilanka and the world as known him as a ragby Majeed ( srilankan Captain 1962)

    A politician with principles who is capable, efficient & honesty.

    ssp Majeed playd more key role for the Nation



    1.Srilankan Ragby Captain (1965 - 1972) The 1st muslim captain

    2.high commissionner of srilanka in india 1984 - 1988

    3.A respected Senr Superint of Police, (Director NIB ) senior intelligence officers with Sri Lanka’s National Intelligence Bureau now reorganised as the Directorate of Internal Intelligence and Directorate of External Intelligence 1988 - 1993

    4.difference coordinator for eastern province 1993 - 1995

    5.Member of Parliament for Digamadulla 1999 - 2002

    6.peace talk sri lanka "Both LTTE and Government of Sri Lanka Delegation" ssp majeed was A Government Agent For eastern province

    7.Member of Eastern Provincial Council


    A past Sri Lankan Rugby captain and a diplomat who has served the Nation.

    ReplyDelete
  10. My choice will be SSP Majeed as well. Not only he has the above dignitary status. He is one person who is willing to help anybody regardless of which political party he or she is from. Sri Lanka and the Eastern Province populated with a multi ethnic society, he is a person who will help when you are in need regardless what political background you are from. Having in mind his experience, SSP Majeed wouldn’t have an issue working with multi cultural groups. He is a man of truth and is never a person who has lost respect or dignity amongst the community. Hopefully, our leader understands and give this honest man a chance to prove his capability.

    ReplyDelete

Powered by Blogger.