மசூர் சின்னலெப்பையின் மரணத்திற்கு அமைச்சர் றிசாத் அனுதாபம் தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்து மக்களின் மனங்களில் இடம்பிடித்து அரசியலில் தனக்கென தனியான இடத்தை தக்க வைத்துக் கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் இழப்பு குறித்து தமது ஆழ்ந்த கவலையினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதீயுதீன் தெரிவித்துள்ளதுடன்,அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரார்த்திப்பதாகவும் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கட்டாருக்கு சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் இது குறித்து தகவல் அறிந்ததும்,தமது கவலையினை வெளியிட்டுள்ளார். மேலும் அவ்வறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கிழக்கில் வாழும் சகல சமூகங்களினது ஒற்றுமை.எதிர்காலத் தேவைப்பாடு என்பனவற்றை பெற்றுக் கொடுப்பதில் மசூர் சின்னலெப்பை அவர்கள் மிகவும் முக்கிய பாத்திரத்தை கொண்டிருந்தார்.கட்சிகளுக்கு அப்பால் அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு தவிசாளராக இருந்த போதும்,அதன் பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக மாறிய போதும் இடைவிடாது தமது பணியினை ஆற்றியுள்ளமையினை நினைவுபடுத்துவது பொருத்தமாகும் என தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,அன்னாரின் சுவன வாழ்வுக்கு பிரார்த்திப்பதாகவும்,அவரது இழப்பால் துயறுரும் குடும்பஸ்தினர்களுக்கு தமது அழ்ந்த கவலையினை தெரிவிப்பதாகவும் கட்டாரிலிருந்து தெரிவித்துள்ளார்.

Post a Comment