Header Ads



டுபாயில் இன்று மாத்திரம் புகைபிடிக்க தடை

ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணங்களில் ஒன்றான துபாயில் இன்று புகைப்பிடிக்கவும், சிகரெட் தயாரிப்புகளை விற்பனை செய்வதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை கொண்டாடும் விதமாக துபாய் மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

புகைப் பிடிப்பதால் ஏற்படும் அபாயத்தைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகைப்பொருட்களின் உபயோகத்தை குறைப்பதுக் குறித்து சிந்திக்கச் செய்யவும் 24 மணிநேர தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரி ரிதா ஸல்மான் கூறினார்.

சர்வதேச அளவில் மே 31-ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. எமிரேட்ஸில் பெரும் வர்த்தக நிறுவனங்களான லூலு, அல்மயா, ஃபேமிலி, ஸஃபீர் குழுமம் போன்றவை மாநகராட்சியின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.