வன்னி மாவட்ட விளையாட்டுதுறை தலைவராக ஹூனைஸ் பாருக் நியமனம்
வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறை தலைவராக வன்னி மாவட்ட பாராளுமன் உறுப்பினர் ஹூனைஸ் பாருக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் இன்று (2012.05.29) இடம் பெற்ற வடமாகாண விளையாட்டுத் துறை மாநாட்டில் வைத்து இந்த நியமனத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வழங்கினார்.மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் விளையாட்டுத் துறையினை மேம்படுத்தும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
அதே வேளை ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும், ஒவ்வொரு விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளதுடன்,மாவட்டத்தின் பிரதான விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படடள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் வடமகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார்,மற்றும்அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலளார்கள் ,விளையாட்டுத் துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment