Header Ads



ஈரான் அமைச்சருடன் றிசாத் பதியுதீன் சந்திப்பு (படங்கள்)



கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஈரான் நாட்டின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை (2012.05.29)அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையிலிருந்து ஈரான் தேயிலையினை நேரடியாக இறக்குமதி செய்த போதும்,இன்னும் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாகவும்,இலங்கையின் உட்கட்டமைப்பு அமைப்பு செயற்பாடுகளுக்கு ஈரான் தமது பங்களிப்பை வழங்க எண்ணியுள்ளதாகவும்,இணைந்த  வர்த்த்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பலமுள்ளதாகவும் ஈரானிய அமைச்சர் கூறினார்.

இலங்கை சகல சமூகமும் வாழக் கூடிய நாடாகும்,மக்கள் மிகவும் நெருக்கமாக வாழ்வதாகவும்,சில வெளிநாட்டு சக்திகள் இலங்கை மக்கள் நிம்மதியாக வாழ்வதை விரும்பவதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர றிசாத் பதியுதீன்,ஜனாதிபதி தலைமையில் தொடர்ந்தும் மக்கள் நிம்மதியாக வாழ்வதாகவும் கூறினார்.

அதே வேளை இலங்கையின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை மேலும் வலுப்படுத்த பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை இரு தரப்பினரும் தமது கலந்துரையாடல்களின் போது பகிரந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.