Header Ads



ரவூப் ஹக்கீம் மலேசிய இந்திய சமூக சேவைகள் அமைப்பினருடன் கலந்துரையாடல் (படங்கள்)


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் மலேசிய - இந்திய சமூக சேவைகள் அமைப்பின் தவிசாளர் பொறியியலாளர் டத்தோ தஸ்லீம் இப்றாஹீம் க்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை, 17 ஆம் திகதிகொழும்பு ஹோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதன் போது விசேட விருந்தினராக இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீனும் கலந்து கொண்டிருந்தார்.

கலந்துரையாடலின் போது மலேசிய - இந்திய சமூக சேவைகள் அமைப்பின் தவிசாளரினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சமூகப் பணிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு குறிப்பிட்ட பணியை இவ்வாறு இலங்கையில் விஸ்தரிப்பது தொடர்பாக நீதி அமைச்சருடனும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகரிடமும் விரிவான கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் இலங்கையின் நீதித் துறையானது மலேசிய நீதித் துறையுடன் இணைந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பாக நீதி அமைச்சர் மலேசிய பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார். மேற்படி நிகழ்வில்
அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான சட்டத்தரணி சாதிக்குல் அமீன், சட்டத்தரணி எம்.சீ.எம். நவாஸ் மற்றும் நீதி அமைச்சின் சார்பாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி சல்மான், சிபான் மஹ்றூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.






No comments

Powered by Blogger.