Header Ads



ஆட்சியில் இருந்தபோது குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடக்கூட முடியவில்லையாம்..!


 
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ள தற்போதைய அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, அரசியலில் இருந்து விலகி மீண்டும் வழக்கறிஞர் தொழிலைச் செய்ய திட்டமிட்டுள்ளார்.பிரான்சில் நடந்த இரண்டு கட்ட அதிபர் தேர்தலில், சர்கோசி தோல்வியடைந்தார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில்,

"தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும், பத்திரிகையாளர்கள் இடைவெளி கொடுக்காமல் என்னை சூழ்ந்து கொள்கின்றனர். ஆட்சியில் இருந்தபோது என் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடக் கூட முடியவில்லை.

விரைவில் எனக்கு அமைதி கிடைக்கப் போகிறது' எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே அவர் புதிய அதிபர் ஹோலன்டிடம் வரும் 15ம் தேதி தன்னுடைய பொறுப்புகளை அளித்து விட்டு, மனைவி கர்லா ப்ருனியுடன் சுற்றுலா செல்ல உள்ளார். ஊரையெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு, தன்னுடைய பழைய தொழிலான வழக்கறிஞர் உத்தியோகத்தை கவனிக்க உள்ளதாக, "டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிவில் வழக்குகளை கையாள்வதில் சர்கோசி கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Well said in Tamil Language: "Chee! chee! Inthap Palam Pulikkum!"

    ReplyDelete
  2. நல்ல பதில், '' சீ சீ, இந்தப் பழம் புளிக்கும்''

    ReplyDelete

Powered by Blogger.