Header Ads



குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 42 ஆவது இடம்

சேவ் த சில்ரன் அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ள தாய்மார் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கை குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகள் பட்டியலில் 42ஆவது இடத்தில் உள்ளது.

குறைந்த அபிவிருத்தி அடைந்த நாடுகள் பட்டியலில் கியூபா முதலாவது இடத்திலும் இந்தியா 76ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 78ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்மார் சுட்டெண்ணின் அடிப்படையில் அதிக அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பட்டியலில் நோர்வே முதலாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் அபிவிருத்தி அடையாத நாடுகள் பட்டியலில் நைகர் இறுதியான இடத்தை வகிக்கின்றது.


No comments

Powered by Blogger.